பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் மெத்தனத்தால் போர்க்களமான தேர்தல்

Added : ஜன 12, 2020
Advertisement

விருதநகர்:மாவட்டத்தில் வத்திராயிருப்பு, நரிக்குடி ஒன்றியங்களில் நடந்த தேர்தல் வன்முறை வெறியாட்டத்தை தடுக்க போலீசார் தவறி விட்டனர் என்ற குற்றச்சாட்டு மக்களிடையே
எழுந்துள்ளது.

மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் வத்திராயிருப்பு, நரிக்குடி ஒன்றியங்களில் தான் உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இழுபறி இருந்து வந்தது. அங்கு தேர்தல்
வன்முறை நடக்க அதிக வாய்ப்பிருந்தது. பதற்றமான பகுதியாக கருதப்படும் இப்பகுதிகளில் போதிய போலீஸ் பாதுகாப்பை அமைக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் தவறிவிட்டது.இதனால் வத்திராயிருப்பு ஒன்றிய அலுவலம் சூறையாடப்பட்டது.

இதில் போலீசார் சிலரும், பத்திரிகையாளர் ஒருவரும் தாக்கப்பட்டனர். இது போல் நரிக்குடி ஒன்றியத்தில் நடந்த தேர்தல் வன்முறையில் டி.எஸ்.பி., வெங்கடேஷனை ரவுடி கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. தேர்தல் வன்முறை வெறியாட்டத்தால் மாவட்டத்தில் தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இதற்கு மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


விருதுநகரிலும் அலட்சியம்



விருதுநகர் ஒன்றிய அலுவலகத்திற்கு தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் காரில் வந்தனர். அவர்களுடன் சமீபத்தில் அ.தி.மு.க., சார்பில் 21 வது வார்டில் போட்டியிட்டு வென்று தி.மு.க.,வில் இணைந்த தமிழ்செல்வனும் வந்தார்.

இவர்கள் விருதுநகர் ஒன்றிய அலுவலகத்திற்கு காலேஜ் ரோட்டில் செல்லாமல் குறுக்கு வழியில் சென்றதை அங்கிருந்த அ.தி.மு.க.,வினர் பார்த்து ஆக்ரோஷமாக போலீசாருடன் திட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X