கேக் எடு... 7ம் தேதினா, ஏழே ரூபா தான்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கேக் எடு... 7ம் தேதினா, ஏழே ரூபா தான்

Added : ஜன 12, 2020

கொண்டாட்டம் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது, 'கேக்' ஆகத்தான் இருக்கும். இந்த பெயரை உச்சரித்ததுமே, இங்கே பலரது கண்களில், 'பல்ப்' எரிய துவங்கியிருக்கும்.
வழக்கமான பர்த்டே கேக், கப் கேக், டோனட்ஸ், சாக்லேட் கேக், பிளாக்பாரஸ்ட் கேக் ரகங்களுக்கு மத்தியில் வண்ணத்திலும் பிளேவர்களில் வித்தியாசத்துடன் ஈர்க்கிறது, '7 ஹெவன்' கேக் ஷாப்.முட்டை பயன்படுத்தாமலே அனைத்துவித பிளேவருடன் பிரெஷ்ஷாக, கேக் தயாரித்து வருகிறது. கூடவே, கப் கேக்ஸ், டீ கேக்ஸ், கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் அலங்கார கேக்குகள் உள்ளன. கஸ்டமர்ஸ் கேட்கும் உருவத்தில் வடிவமைத்து தருகிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆயிரம் டிசைன்களில் கேக் கிடைக்கும். தவிர, பீட்சா, பர்கர், சாண்ட்விச், பாஸ்தா, மில்க்ேஷக்குகளும் உள்ளன.
ஒரு பர்த்டே பார்ட்டிக்கான அத்தனை அம்சங்களும் உள்ளன.இங்கு ஸ்பெஷல் அயிட்டமே, 'வெல் கேக்'தான். பெயருக்கு ஏற்ப கிணறு போல வடிவமைப்பில் நடுவில் சாக்லேட்டை சேர்த்து 'ஹீட்' செய்து தருகின்றனர். உருகி வரும் கிரீமை குழந்தைகள் உருகி சாப்பிடும் அழகே இங்கு தனிதான். பல பிளேவர்களில் கிடைக்கும் கப் கேக்களுக்கும் இங்கே பேன்ஸ் ஜாஸ்தி. மற்ற நாட்களில் இதன் விலை 30 ரூபாய் எனில், ஒவ்வொரு மாதமும், 7ம் தேதி மட்டும், 7 ரூபாய் மட்டுமே. ஒருவர், ஆறு கப் கேக் மட்டுமே அதிகபட்சம் வாங்க முடியும்.அதேபோல், வெஜ் பீட்சா மற்ற நாட்களில் 190 ரூபாய் எனில், 7ம் தேதி வருவோருக்கு ஜஸ்ட், 77 ரூபாய் மட்டும்தான். காலை, 11:00 முதல் இரவு, 10:00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். ஆன்லைன் ஆர்டர்கள் மற்றும் ஹோம் டெலிவரி வசதி உண்டு.கீதா பார்மசி எதிரில்,அவிநாசி ரோடு.63791 28228

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X