கைகொடுத்த பயிற்சி... | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கைகொடுத்த பயிற்சி...

Added : ஜன 12, 2020

ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், சேலத்தில், நடந்த மாநில கூடைப்பந்து போட்டியில், திருப்பூர் மாவட்ட அணியில், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், வன்னியன், பரத்ராஜ், மகாராஜன், சக்திவேல், ஜஸ்வின்ராஜ், பாரதி, பீர்முகமது, தீபக் ஆகிய மாணவர்கள் பங்கேற்றனர். இதில், வன்னியன் கேப்டனாக செயல்பட்டார்.மாநில போட்டியில் இறுதியாட்டம் வரை பயணித்த திருப்பூர் மாவட்ட அணி, சேலம் சாய் அணியுடன் நடந்த இறுதி போட்டியில்,, 20 - 15 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை தழுவியது.''ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, பள்ளி கூடைப்பந்து அணியில் இடம் பெற்று, காலை, மாலை தவறாமல், தீவிர பயிற்சி மேற்கொண்டோம். இதன் பயனாய் மாநில போட்டிக்கு செல்ல முடிந்தது. தொடர் பயிற்சியால் மட்டுமே தனித்திறன் மேம்படும்'' என்கின்றனர், மாணவர்கள்.கேப்டன் வன்னியன் கூறுகையில், ''ஒருமுறை தமிழக கூடைப்பந்து ஜூனியர் அணியில் பங்கேற்று, விளையாடியுள்ளேன். ஒவ்வொரு போட்டியிலும் வெல்லும் பதக்கமே அடுத்த நிலைக்கு செல்ல உத்வேகமாக அமையும்'' என்றார்.ஆசிரியர் ஹரி கூறுகையில், ''மாணவர் விருப்பத்துக்கு ஏற்ப பயிற்சி அமைய வேண்டும். போட்டிக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன் நுணுக்கங்களை கற்றுத்தர வேண்டும். வெற்றி, தோல்வி எதுவாக பார்த்துக் கொள்ளலாம் என்ற புரிதலை எடுத்து கூற வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் விளையாடுவர்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X