பொது செய்தி

தமிழ்நாடு

மண் வாசனை மணக்க கலைவிழா!

Added : ஜன 12, 2020
Advertisement

ஏட்டுக்கல்வியில் மூழ்கி, கலாசாரம், பாரம்பரியத்தை மெல்ல, மெல்ல மறந்து வரும் பள்ளி குழந்தைகளுக்கு இவற்றை சொல்லி கொடுப்பது காலத்தின் அவசியமாகி இருக்கிறது.இதற்கான பிரம்மாண்ட ஏற்பாட்டை, 'தமிழ்ப் பண்பாட்டு பாரம்பரியக் கலைவிழா' என்ற பெயரில், அவிநாசி கச்சேரி வீதியில் உள்ள எஸ்.பி.ஆர்., அறக்கட்டளை, பழனியப்பா மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி ஏற்பாடு செய்திருந்தது.ஆங்கில வழிக்கல்வி போதிக்கும் இப்பள்ளி வளாகம் முழுக்க, தமிழ் மணம் மாறாத, கிராமத்து தோற்றத்துக்குள் கொண்டு வரப்பட்டது.சூரிய பொங்கலில் துவங்கி, பாரம்பரிய இசை, சேவல், ஆடு, காளைகளின் கண்காட்சி, பெட்டிக்கடை, மாடு, குதிரை வண்டி சவாரி, ரங்க ராட்டினம் என, பராம்பரிய நிகழ்வுகள் அனைத்தும், ஒன்றுவிடாமல் இடம் பெற்றிருந்தன.பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பங்குக்கு கிராமிய நடனமாடி பிரமிக்க வைத்தனர்.மாலை வரை கலகலப்பு குறையால் நடந்தேறிய விழா, மங்கல இசையுடன் சுபம் கண்டது.''போட்டி சூழ் உலகில் ஆங்கில அறிவும், புலமையும் அவசியம் என்ற போதும், தமிழரின் பாரம்பரியம், கலாசாரத்தை மாணவ சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியாக தான், முதன் முறையாக இத்தகைய விழாவை நடத்தினோம்,'' என்றார் பள்ளி தாளாளர் ராஜ்குமார்.கிராமத்து மண் வாசனை நுகர்ந்து, பாரம்பரியம் படித்து, கலாசாரத்தை மனனம் செய்து, தமிழ் மண்ணில் வீரம் உணர்ந்து, திருப்தியுடன் ஒரு நாளை கழித்தனர் மாணவர்களும்,பெற்றோரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X