பொது செய்தி

தமிழ்நாடு

வேம்பு டம்ளரில்

Added : ஜன 12, 2020
Advertisement

பாரம்பரியத்தை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதில் கலைப்பொருட்களுக்கு என்றுமே தனியிடம் உண்டு. இப்பொருட்கள் இன்னும் நம்மிடையே உயிர்ப்போடு இருக்க, கைவினை கலைஞர்களின் பங்கு அலாதியானது. இவர்களுக்கான சரியான தளத்தை அமைத்து தரும் விதமாக, தமிழ்நாடு அரசு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக்கழகத்தின் பூம்புகார் விற்பனையகம் சார்பில், 'கிராப்ட்ஸ் உத்சவ்' கைவினை பொருட்கள் கண்காட்சி திருப்பூரில் துவங்கியுள்ளது.திருப்பூர் பல்லடம் ரோடு, ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடந்து வரும் இக்கண்காட்சியில், பஞ்சலோக சிலைகள், தஞ்சை ஓவியங்கள், தஞ்சை கலை தட்டு, பித்தளை சிற்பங்கள், பித்தளை அன்னம் நகாஸ் விளக்குகள், சணல் பொருட்கள், அதிநவீன நகைகள், மர வேலைப்பாடுள்ள பரிசு பொருட்கள், தோல் பொருட்கள், மதுரை சுங்கடி சேலைகள், வாரணாசி ஜரிகை துணி வகைகள், ராஜஸ்தான் கைத்தறி படுக்கை விரிப்பு, சுடிதார் வகைகள், முத்து வகைகள் என, ஏராளமான பொருட்கள் ஸ்டால்களில் இடம்பெற்றுள்ளன.இதில், சென்னையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் வேம்பு மரத்தாலான டம்ளர், குடுவைகளுக்கு மவுசு அதிகமாகவே இருந்தது. அதன் ரகசியத்தை அவரிடமே கேட்போம்...பி.டெக்., மெக்கானிக் முடிச்சு தனியார் கம்பெனியில் வேலைபார்க்கிறேன். விபத்து காரணமாக, வீட்டில் இருக்க நேர்ந்தது. எங்கள் குடும்பத்தினர், மர வேலைப்பாடு தொழிலில் ஈடுபடுபவர்கள் என்பதால், ஓய்வு நேரத்தில் ஜூவல்லரி பாக்ஸ் செய்வேன். அனைவரும் பயன்பெறும் வகையில், புதுமையான பொருள் தயாரிக்கலாம்னு சிந்திக்கும்போது, வேம்பு டம்ளர் ஐடியா வந்தது.இயற்கை, சித்த மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு இன்றைய மக்களுக்கு நிறையவே உள்ளது. ஆனாலும், 30 வயது நெருங்கும் போதே பலரும் சர்க்கரை நோய், கல்லீரல், கிட்னி சம்பந்தமான நோய்க்கு ஆளாகின்றனர். இதை ஆரம்பத்திலே எப்படி தடுக்கலாம்னு சித்த மருத்துவர்கள் ஆலோசனை கேட்டு போனேன். அவர்கள் கொடுத்த குறிப்புகளில் உருவானதுதான் வேம்பு டம்ளர்.ஆய்வகத்தில் கொடுத்து போது நல்ல ரிசல்ட் கிடைத்தது. இதனை, 8- 16 மணி நேரம் தண்ணீரை ஊற்றி வைத்து பருகினால் எந்த ஆரோக்கியமாக வாழலாம். வேம்பில் ஆக்சிஜனை வெளியிடும் சக்தி அதிகம் என்பதால், தண்ணீரில் கலக்கும் போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். விளையாட்டு வீரர்கள், வயதானவர்களுக்கு மிகவும் பயன்படும். புத்துணர்ச்சியாக இருக்கும்.இரவில் தண்ணீர் ஊற்றி வைத்து காலையில் ஒரு டம்ளர் குடித்தால் போதும், எனர்ஜி குறையாது; உடல் வலி இருக்காது. வேம்பு நீர் அனைத்து வயது தரப்பினருக்கும் ஏற்றது. வேப்பெண்ணெய், தேன்மெழுகு, ஆலிவ் ஆயில் சேர்த்து தயாரிக்கிறோம். வெளிப்பகுதி மட்டும் வார்னிஷிங் செய்துள்ளோம். இதை தேங்காய் நார் கொண்டு மட்டுமே கழுவ வேண்டும். மலைப்பகுதியில் சுத்தமான மூலிகை தண்ணீர் குடிப்பது போன்ற அனுபவம் இந்த தண்ணீரில் கிடைக்கும். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உண்டு.சாப்பாட்டு கிண்ணம், தண்ணீர் குடுவை, வாட்டர் பாட்டில் என பல வகைகள் உள்ளன. ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் எடுத்தால் போதும். 16 மணி நேரத்திற்கு மேல் தண்ணீர் பருகக்கூடாது.இவ்வாறு, சதீஷ்குமார் கூறினார்.பூம்புகார் விற்பனை மேலாளர் நரேந்திர போஸ் கூறுகையில், ''விரும்புவோர் இன்று நிறைவடையும் கண்காட்சியில், காலை, 10:00 முதல் இரவு 8:00 மணி வரை விசிட் அடிக்கலாம். சுமார், 100 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பொருட்கள் விற்பனையாகின்றன. 10 சதவீத தள்ளுபடி உண்டு,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X