பொது செய்தி

தமிழ்நாடு

சந்திரனை தொட்டது யாரு!

Added : ஜன 12, 2020
Advertisement

சிறுவன் 1: 'சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா?'சிறுவன் 2 : 'இல்ல. நான் தானே...!'இப்படியாக ரெண்டு குட்டீஸ்கள் மொட்டை மாடியில் மல்லாக்க படுத்து, கால்மேல் கால்போட்டபடியே நிலாவை ரசித்துக்கொண்டிருந்தனர். உடனே ஒருவன் அருகில் இருந்த பேப்பரை எடுத்து நிலாவின் வடிவத்தை பென்சில் ஸ்கெட்ச் மூலம் வரைய ஆரம்பித்தான். அருகில் இருந்தவன், 'தப்பு... தப்பு... நான் வரைஞ்சதுதான் சரி'னு விவாதம் ஓய்வதற்குள், 'சாப்பாடு கிடையாது; பேசமா மாடியிலே துாங்குங்கடா'என அம்மாவின் அதட்டல் சத்தம் விட குடுகுடுனு ஓடிவிட்டனர் இருவரும்...!இந்த விஞ்ஞானிகள் வேறு யாறுமில்லை மேட்டுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள்தான். வானில் நிகழும் அரிய நிகழ்வுகள் குறித்த ஆர்வத்தை துாண்டும் விதமாக, இப்பள்ளி அசத்தல் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. 'ஓபன்ஸ்பேஸ் பவுண்டேசன்' உடன் இணைந்து நாசா வடிவமைத்த சந்திர கண்காணிப்பு பதிவேட்டை, 5 -8ம் வகுப்பு மாணவருக்கு இலவசமாக வழங்கியுள்ளது.ஜன., 10ம் தேதி பவுர்ணமியை அடுத்து வரும் 28 நாட்களுக்கு நிலாவின் வடிவத்தை உன்னிப்பாக கவனித்து அதன் வடிவத்தை அந்த பதிவேட்டில் வரைய வேண்டும் என்பதே, 'கான்செப்ட்'. தினமும் பார்வையிடும் நேரத்தையும் குறிப்பிட வேண்டுமாம். இதற்கான ஆராய்ச்சியில்தான் மாணவ குழந்தைகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் விண்வெளி நிகழ்வுகள் குறித்த ஆர்வம் மாணவர்களிடம் அதிகரிக்க வாய்ப்புண்டு என, பள்ளி இடைநிலை ஆசிரியர் சரவணன் தெரிவித்தார். இம்முயற்சி பாராட்டத்தக்கதே!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X