மேலே மேலே செல்லும் அன்னிய செலாவணி இருப்பு

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (20) | |
Advertisement
மும்பை: நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த வாரத்திலும் தொடர்ந்து அதிகரித்து, புதிய சாதனை அளவை தொட்டுள்ளது.புதிய சாதனைகடந்த, ஜனவரி, 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 369 கோடி டாலர் அளவுக்கு அதிகரித்து, 46 ஆயிரத்து, 116 கோடி டாலராக உயர்ந்து, புதிய சாதனை உயரத்தை தொட்டு உள்ளது. இது, இந்திய மதிப்பில், 32.74 லட்சம் கோடி ரூபாய் ஆகும். அண்மைக்
மேலே மேலே செல்லும்  அன்னிய செலாவணி இருப்பு


மும்பை: நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த வாரத்திலும் தொடர்ந்து அதிகரித்து, புதிய சாதனை அளவை தொட்டுள்ளது.

புதிய சாதனை

கடந்த, ஜனவரி, 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 369 கோடி டாலர் அளவுக்கு அதிகரித்து, 46 ஆயிரத்து, 116 கோடி டாலராக உயர்ந்து, புதிய சாதனை உயரத்தை தொட்டு உள்ளது. இது, இந்திய மதிப்பில், 32.74 லட்சம் கோடி ரூபாய் ஆகும். அண்மைக் காலமாகவே தொடர்ந்து அன்னிய செலாவணி இருப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.


latest tamil news


இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த, 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 46 ஆயிரத்து, 116 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது ஒரு புதிய சாதனை அளவாகும்.இதற்கு முந்தைய வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 252 கோடி டாலர் அதிகரித்து, 45 ஆயிரத்து, 495 கோடி டாலராக உயர்ந்திருந்தது.முக்கிய பங்குமதிப்பீட்டு வாரத்தில், இந்த உயர்வுக்கு முக்கிய காரணம், மொத்த இருப்பில் முக்கிய பங்கு வகிக்கும் வெளிநாட்டு பணத்தின் மதிப்பு, 301.3 கோடி டாலர் அதிகரித்து, 42 ஆயிரத்து, 795 கோடி டாலராக உள்ளதுதான்.
மதிப்பீட்டு வாரத்தில், தங்கத்தின் இருப்பு, 66.6 கோடி டாலர் அதிகரித்து, 2,806 கோடி டாலராக உள்ளது.இவ்வாறு, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (20)

Sundar - Madurai,இந்தியா
12-ஜன-202020:05:39 IST Report Abuse
Sundar Encouraging. The depreciation of rupee against US dollar will encourage the export and will solve many issues gradually.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-ஜன-202015:14:06 IST Report Abuse
J.V. Iyer மோடிஜி, பாஜக ஆட்சி செய்யும்போது எதற்கும் கவலை இல்லை. நாமெல்லாம் மோடிஜியின் பின்னே
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
12-ஜன-202010:44:06 IST Report Abuse
bal இதுக்கு யாரும் பிஜேபியை புகழமாட்டார்கள்....திருட்டுப்பய புள்ளைகள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X