பொது செய்தி

தமிழ்நாடு

இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுமான பணி எப்போது? பனியன் தொழிலாளர் எதிர்பார்ப்பு

Added : ஜன 12, 2020
Advertisement
 இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுமான பணி எப்போது? பனியன் தொழிலாளர் எதிர்பார்ப்பு

திருப்பூர்:பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய இடத்தில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு திருப்பூரில் மேலோங்கியுள்ளது.நாட்டின் பின்னலாடை நகரான திருப்பூர், ஏற்றுமதி மூலம், ஆண்டுக்கு 27 ஆயிரம் கோடி மதிப்பில் அன்னிய செலாவணி ஈட்டித்தருகிறது; 18 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டுக்கான ஆடை தயாரிப்பு நடக்கிறது.பின்னலாடை துறை சார்ந்து, வெளிமாவட்டம், வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆறு லட்சம் தொழிலாளர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். தொழில் வளர்ச்சி, தொழிலாளர் எண்ணிக்கை மிகுந்த திருப்பூரில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை இல்லாதது பெரும் குறையாக உள்ளது.கடந்த 2011ல், பூண்டி ரிங் ரோட்டில் மருத்துவமனை கட்டுவதற்கு, 7.5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. கடந்த 2012ல், சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டது; மருத்துவமனை கட்டவில்லை. அதனால், பல லட்சம் தொழிலாளர்கள், மருத்துவ வசதி பெற முடியாமல் தவிக்கின்றனர்; சிகிச்சைகளுக்கு, கோவை மருத்துவமனையை நாடும் நிலை உள்ளது.அரசு விழா மற்றும் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, கடந்த 2019, பிப்ரவரி 10ல், பிரதமர் மோடி திருப்பூர் வந்தார். அப்போது, திருப்பூரில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட அதே இடத்தில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.அடிக்கல் நாட்டப்பட்டு ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், இன்னும் அந்த இடத்தில் மருத்துவ மனை கட்டுவதற்கான பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.கடந்த 2019, செப்டம்பர் மாதம் டில்லியில் நடந்த இ.எஸ்.ஐ., கட்டுமான பிரிவு துணைக்குழு கூட்டத்தில், திருப்பூரில் மருத்துவமனை கட்டவதற்காக மத்திய பொதுப்பணித்துறை அளித்த கட்டட வரைபடம், இ.எஸ்.ஐ., விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை; மறு வரைபடம் தயாரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.ஆனால், அதன்பின், மருத்துவமனை கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் டில்லியில் நடந்த இ.எஸ்.ஐ., வாரிய கூட்டத்திலும், திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுவது குறித்த எவ்வித பேச்சுக்களும் எழுப்பட்டவில்லை என தெரியவந்துள்ளது.மருத்துவமனை அமைக்கப்படாததால், புற்கள் முளைத்து வெற்றுப் பகுதிக்கு, சுற்றுச்சுவரும், கதவும் பாதுகாப்பாக காணப்படுகின்றன. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய இடத்தில், விரைவில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்க வேண்டும்; மருத்துவ வசதிக்காக தொழிலாளர் சந்திக்கும் சிரமங்களுக்கு தீர்வு காண வேண்டும் என்பது, பின்னலாடை தொழிலாளர், தொழில் முனை வோரின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X