பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளை ஈ தாக்குதல் அதிகரிப்பு தென்னை விவசாயிகள் கவலை

Added : ஜன 12, 2020
Share
Advertisement

பொங்கலுார்:தென்னையில் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துஉள்ளனர்.- திருப்பூர் மாவட்டத்தில் தண்ணீர் வசதியுள்ள விவசாயிகள் பெரும்பாலானோர் தென்னை சாகுபடி செய்துள்ளனர். கடந்த, 2011க்கு பின் கடும் வறட்சி நிலவுவதால், தென்னை விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். வருமானத்தையும் இழந்து ஆழ்குழாய் கிணறு தோண்டுவதற்கு பெரும் தொகையை செலவிட்டுள்ளனர்.தற்போது தென்னை மரங்களை வெள்ளை ஈக்கள் அதிகளவில் தாக்கி சேதப்படுத்தி வருகிறது. ஹைபிரிட் மற்றும் ஆந்திரா குட்டை போன்ற ரகங்களில் பெரும்பாலான மரங்கள் நோய் தாக்குதலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கருகி விட்டன.நாட்டு ரக நெட்டை மரத்தையும் வெள்ளை ஈக்கள் தாக்கத் துவங்கி உள்ளன. வெள்ளை ஈக்கள் மழை அதிகமாகப் பெய்யும் காலங்களில் அழிந்துவிடும். ஆனால், இந்தாண்டு மழை போதுமான அளவு பெய்யவில்லை. வெள்ளை ஈக்கள் தென்னை ஓலையின் உட்பகுதியில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறது.லேசான மழை இதை அழிப்பது சிரமம். தற்போது வெயில் அடிப்பதால் வெள்ளை ஈக்களின் உற்பத்தியும் பெருகி வருகிறது. இதனால், விவசாயிகள் பொருளாதார ரீதியாக பலத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.இதுகுறித்து வேளாண் துறையினர் கூறுகையில், மழை புரட்டி எடுத்து இருந்தால் தென்னை ஓலையின் உட்பகுதியில் இருந்தாலும் அவற்றின் இனப்பெருக்கம் பெருமளவில் கட்டுப் படுத்தப்பட்டிருக்கும்.மருந்து தெளித்தால் இதனுடைய உற்பத்தி அதிகரிக்கும். தென்னை மரங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேம்பு புண்ணாக்கு இடுவதன் மூலமும், என்கார்சியா ஒட்டுண்ணி ஏக்கருக்கு, 5 'சிசி' முட்டை தொகுப்பை வைப்பதன் மூலமும் இவற்றைக் கட்டுப்படுத்த முடியும். இவை ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் கிடைக்கும். விவசாயிகள் இவற்றை வாங்கி பயன்படுத்தலாம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X