சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலாற்று மணல் கடத்தியவர் கைது

Added : ஜன 12, 2020
Advertisement

பாலுார்: பாலுார் அடுத்த, பழைய சீவரம் பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த, 'டாடா மேஜிக்' ஆட்டோவை, ரோந்து பணியில் இருந்த, பாலுார் போலீசார் மடக்கினர்.வேனிலிருந்து தப்பியோடிய, அங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜசேகரன், 37, என்பவரை பிடித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, ராஜசேகரை கைது செய்தனர்.
விபத்தில் வாலிபர் பலி
மறைமலை நகர்: வேலுார் மாவட்டம், நாட்றாம்பள்ளியைச் சேர்ந்த அருள் மகன் லட்சுமணன், 22; மறைமலை நகர் அடுத்த, மல்ரோசபுரத்தில், ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம், நிறுவனத்திற்கு கூரை அமைக்கும் பணியில் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக, 50 அடி உயரத்தில் இருந்து விழுந்தார்.இதில், படுகாயமடைந்த அவரை, அருகிலிருந்தோர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர், லட்சுமணன் ஏற்கனவே இறந்ததாக கூறினார். மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
காதலித்து ஏமாற்றியவர் கைது
பொன்னேரி: பொன்னேரியைச் சேர்ந்தவர், 19 வயது தனியார் கல்லுாரி மாணவி. இவர், தச்சூரைச் சேர்ந்த, கவுதம், 19, என்பவரை காதலித்தார். கவுதம், திருமணம் செய்து கொள்ள மறுத்து, அவரை விட்டு விலகியுள்ளார். இது குறித்து மாணவி கேட்டதற்கு, மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.இது தொடர்பாக கல்லுாரி மாணவி அளித்த புகாரின்படி, பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், கவுதமை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X