பொது செய்தி

தமிழ்நாடு

'ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்!' ஏ.இ.பி.சி., தலைவரிடம் 'டீமா' வலியுறுத்தல்

Added : ஜன 12, 2020
Advertisement
 'ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்!' ஏ.இ.பி.சி., தலைவரிடம் 'டீமா' வலியுறுத்தல்

திருப்பூர்:டீமா சங்க நிர்வாகிகள், ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேலை சந்தித்து, வாழ்த்து தெரிவித்துள்ளனர்; இணைந்து செயல்பட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தலைவராக, நான்காவது முறை, சக்திவேல் பதவியேற்றுள்ளார். டில்லியிலிருந்து திருப்பூர் திரும்பியுள்ள ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேலை, 'டீமா' சங்க தலைவர் முத்துரத்தினம், துணை தலைவர் முரளி, செயற்குழு உறுப்பினர்கள் சதாசிவம், மணி ஆகியோர், அப்பாச்சி நகரில் உள்ள அலுவலகத்தில், சக்திவேலை சந்தித்து, வாழ்த்து தெரிவித்தனர்.
மத்திய அரசிடமிருந்து ஜி.எஸ்.டி., ரீபண்ட், எம்.இ.ஐ.எஸ்., உள்ளிட்ட திட்ட சலுகைகள் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ரிஸ்கி எக்ஸ்போர்ட்டர் பிரச்னை, ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது.இப்பிரச்னைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும். திருப்பூரில் உள்ள அனைத்து பின்னலாடை துறை சங்கங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என, டீமா சங்க நிர்வாகிகள், ஏ.இ.பி.சி., தலைவரிடம் தெரிவித்தனர்.
'டீமா' சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழில் வளர்ச்சிக்கு, சக்திவேல், நான்காவது முறையாக ஏ.இ.பி.சி., தலைவராக பதவியேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆயத்த ஆடை துறை பிரச்னைகளை சந்தித்துவரும் இத்தருணத்தில், அவர் தலைவராகியிருப்பது, திருப்பூருக்கும், ஆடை உற்பத்தி துறைக்கும் கூடுதல் பலம் சேர்க்கிறது.அமைச்சர்களிடம் தொடர்ந்து முறையிட்டு, ஆயத்த ஆடை துறையின் பிரச்ைனகளுக்கு தீர்வு காணப்படும்; தொழில் பிரச்னைகள் விரைவில் விலகும், என, அளித்துள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X