பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் குற்றங்கள் குறைந்த '2019': போலீஸ் கமிஷனர் தகவல்

Added : ஜன 12, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், கடந்தாண்டில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் குற்றங்கள் குறைந்துள்ளதாக, போலீஸ் கமிஷனர் கூறினார்.திருப்பூர் கமிஷனர் சஞ்சய்குமார் கூறியதாவது:திருப்பூர் மாநகர பகுதியில், கடந்த ஆண்டை விட திருட்டு சம்பவங்கள் 19 சதவீதம் குறைந்துள்ளன. பதிவான 277 வழக்குகளில் 252 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, 1.52 கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் மீட்கப்பட்டன.
கொலை சம்பவங்கள் 27 ல் 26 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தரப்பட்டது.கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கையில், 81 வழக்குகள் பதிவு செய்து, 113 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 118 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . மூன்று பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த, 283 வழக்குகளில், 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் 4.62 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக, 496 பேர் கைது செய்யப்பட்டு, 2322 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.போக்குவரத்து விதி மீறல் குறித்து, 2.22 லட்சம் வழக்குகள் பதிவு செய்து 3 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டின் குற்றங்களை பொறுத்தவரை, 2018 ஆண்டை விட குறைவு. இவ்வாறு, அவர் கூறினார்.
போலீஸ் எல்லை விரிவாகிறது?போலீஸ் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில், போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சொந்த கட்டடம், குடியிருப்புகள் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நகரை ஒட்டி அமைந்துள்ள சில பகுதிகளை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. புதிதாக மூன்று பிரிவுகளுக்கு உதவி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆயுதப்படைக்கு உதவி கமிஷனர் விரைவில் நியமிக்கப்படும், எனவும் கமிஷனர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X