குண்டும் குழியுமான ரோடுகள்:

Added : ஜன 12, 2020
Advertisement
 குண்டும் குழியுமான ரோடுகள்:

திருப்பூர்:நகரில், குண்டும் குழியுமாக உள்ள ரோடுகளை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் நகரில், காமராஜர் ரோடு, அவிநாசி ரோடு, பி.என்., ரோடு என, 23.50 கி.மீ., துார ரோடு, நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளது. அதேபோல், மாநகராட்சி சார்பில், 417.19 கி.மீ., ரோடு பராமரிக்கப்படுகிறது.
அதில், கான்கிரீட் ரோடு, 12.61 கி.மீ., துாரத்துக்கும், தார் ரோடு, 318.65 கி.மீ., துாரத்துக்கும் நீள்கிறது. ஆனால், பல ஆண்டுகளாக புதுப்பிக்காத இந்த ரோடுகளில், ஆண்டுக்கு ஒரு முறை 'பேட்ஜ் ஒர்க்' மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.அதிலும், பருவமழையின் போது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சேதம் அதிகமானது. ரோட்டோரங்களில் வடிகால் வசதி இல்லாததால், குப்பை மற்றும் மண் நிறைந்து காணப்பட்டது. மேலும், ரோடுகளில் ஓடிய வெள்ளம் காரணமாக, அரிப்பு ஏற்பட்டு, குண்டும், குழியுமாக மாறியுள்ளன.குறிப்பாக, கொங்குமெயின்ரோடு, யுனிவர்சல்ரோடு, பார்க் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், ரயில்வே ஸ்டேஷன் ஸ்டாப், ஈஸ்வரமூர்த்தி தாய்சேய் நல விடுதி அருகே, வளைவில் தார் பெயர்ந்து, ரோட்டில் குழிகள் ஏற்பட்டுள்ளன.நகரில், வாகன போக்குவரத்து அபரிமிதமாக உள்ள நிலையில், சேதமடைந்துள்ள ரோடுகளால், வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். குறித்த நேரத்தில் உரிய இடத்தை சென்றடைய முடியாமலும், விபத்தில் சிக்கியும் பாதிக்கின்றனர். எனவே, பராமரிப்பு பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டு மென, கோரிக்கை எழுந்துள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சேதமடைந்த ரோடுகளை புனரமைக்கவும், புதிதாக தார் சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், பகுதி வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X