மாவட்டத்துக்கு கிடைத்த தேசிய விருது கேடயம்

Added : ஜன 12, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 2011ம் ஆண்டு முதல், மாவட்ட ஊராட்சி குழு செயல்படுகிறது. கடந்த, கவுன்சில் மற்றும் மாவட்ட திட்டக்குழுவின் செயல்பாடுகள், மாநில அளவிலும், தேசிய அளவிலும் பாராட்டை பெற்றிருந்தது.மத்திய அரசு, 2015-16ம் ஆண்டுக்கான, சிறந்த மாவட்ட ஊராட்சிக்கான தேசிய விருதை, திருப்பூர் மாவட்டத்துக்கு வழங்கி கவுரவித்தது. அத்துடன், 50 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. மாவட்டத்துக்கான, 50 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை, மாவட்ட ஊராட்சியை வந்தடைந்து, செலவிடப்பட்டது.ஆனால், விருதுக்கான கேடயம், திருப்பூர் மாவட்டத்துக்கு வந்து சேரவில்லை. கடந்த முறை தலைவராக இருந்த சண்முகம், கேடயத்தை எடுத்துவர முயற்சி மேற்கொண்ட நிலையில், உள்ளாட்சிகளின் பதவிக்காலம் நிறைவடைந்தது.எனவே, திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், புதிதாக இன்று பொறுப்பேற்க இருக்கும், மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், மத்திய அரசின் தேசிய விருதை, திருப்பூருக்கு கொண்டு வர வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.மாவட்ட ஊராட்சி அலுவலக அதிகாரிகள் கூறுகையில், '1996 முதல் இதுவரை, தமிழக அளவில், திருநெல்வேலி மற்றும் திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழுக்கள் மட்டுமே, தேசிய விருதை பெற்றுள்ளன. மாநிலத்தின் பெருமையை, தேசிய அளவில் எடுத்துரைத்ததால், திருப்பூருக்கு, 2015-16ல் விருது கிடைத்தது.இருப்பினும், தேசிய விருதுக்கான கேடயம், சென்னையிலேயே இருக்கிறது. புதிதாக பொறுப்பேற்க இருக்கும், மாவட்ட ஊராட்சி குழுவினர், தேசிய விருதுக்கான கேடயத்தை எடுத்து வந்து, காட்சிப்படுத்த வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X