பொது செய்தி

தமிழ்நாடு

தண்டவாளத்தை ஒட்டி சிலாப் பதிக்கும் பணி

Added : ஜன 12, 2020
Advertisement
 தண்டவாளத்தை ஒட்டி சிலாப் பதிக்கும் பணி

திருப்பூர்:திருப்பூர் இரண்டாவது ரயில்வே கேட்டில் புதிய சிலாப் கற்கள் பதிக்கும் பணி நடந்தது.திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, இரண்டாவது ரயில்வே கேட் தண்டவாளத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த சிலாப் கற்கள் சேதமடைந்து, ஜல்லிக்கற்கள் பரவி கிடந்தது. இவற்றை சீரமைக்க, சிலாப் கற்களை மாற்றி அமைக்க மூன்று நாட்கள் ரயில்வே கேட் மூடப்படும் என ரயில்வே அறிவித்தது.அதன்படி, கேட் மூடப்பட்டு நேற்று பொறியியல் குழுவினர் மூலம் சிலாப்பு கற்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு, ஜல்லி நிரப்பி, தண்டவாளங்கள் நகராத வகையில் மீண்டும் சிலாப் பதிக்கப்பட்டது. இப்பணி நடப்பதால் திருப்பூர் நோக்கி வந்த ரயில்கள் தற்காலிகமாக ஈரோடு டிராக்கில் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பணி நிறைவு பெற்றதும் கேட் திறக்கப்படும் என ரயில்வே பொறியியல் குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X