பொது செய்தி

தமிழ்நாடு

ஆடை உற்பத்தி செலவு; 30 சதவீதம் குறைக்கலாம்! கருத்தரங்கில் அறிவுறுத்தல்

Added : ஜன 12, 2020
Advertisement
 ஆடை உற்பத்தி செலவு; 30 சதவீதம் குறைக்கலாம்! கருத்தரங்கில் அறிவுறுத்தல்

திருப்பூர்:சிறந்த 80 வகையான நுட்பங்களை செயல்படுத்துவதன்மூலம், ஆயத்த ஆடை நிறுவனங்கள், லாபத்தை அதிகரிக்கலாம்.ஆயத்த ஆடை நிறுவனங்கள் லாபத்தை அதிகரிப்பது குறித்த கருத்தரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நடந்தது. சங்க தலைவர் ராஜாசண்முகம் தலைமைவகித்தார்.ஸ்கிலிப்ட் ஆலோசனை நிறுவன முதன்மை ஆலோசகர் நந்தகுமார் பேசியதாவது:ஆடை உற்பத்தி நிறுவனங்கள், செயல்படுத்துவதற்கு 80 வகை நுட்பங்கள் உள்ளன. இவை அனைத்தையும் செயல்படுத்துவதன்மூலம், 20 முதல் 30 சதவீதம் செலவினத்தை கட்டுப்படுத்தலாம். 500 மெஷின் கொண்ட ஒரு ஆடை தயாரிப்பு நிறுவனம் ஆண்டுக்கு, 6 கோடி ரூபாய் முதல் ஒன்பது கோடி ரூபாய் அளவு செலவை கட்டுப்படுத்தி, லாபத்தை பெருக்கலாம்.தரத்தை உறுதிப்படுத்துவதற்காக, ஆய்வுகள், ஆடை மறு சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன; தரத்தை நிலை நிறுத்துவதற்காக மட்டும், ஆடை மதிப்பில் 12 சதவீத தொகை செலவிடப்படுகிறது.ஆடை உற்பத்தி நிறுவனங்கள், சிறந்த நுால், துணி, பிராசசிங் நிறுவனங்களை கண்டறிந்துகொள்ளவேண்டும். இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் தொழில்நுட்பங்களை செயல்படுத்த வேண்டும். நிறுவன மேம்பாடு, உற்பத்தி மேம்பாட்டுக்கு எத்தகைய மாற்றங்கள் செய்யலாம் என தொழிலாளர்களிடம் கருத்துக்கள் கேட்கலாம்; சிறந்த நுட்பங்களை செயல்படுத்தி, வர்த்தகத்தை மேம்படுத்தமுடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, பயிற்சியாளர் மனோஜ்சிங், ஆடை தயாரிப்பு செலவை கட்டுப்படுத்தும் நுட்பங்கள் குறித்து பேசினார். ஆடை ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள், உற்பத்தி மேலாளர்கள் பங்கேற்று, ஆலோசகர்கள் கூறிய கருத்துக்களை குறிப்பெடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X