சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் போல் நடித்து தங்கம், 'அபேஸ்'

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020
Share
Advertisement

போலீஸ் போல் நடித்து, 1.70 கோடி ரூபாய் மதிப்பிலான, 4.5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற நால்வரை, போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், நெல்லுாரைச் சேர்ந்தவர், கமலேஷ், 40; நகை வியாபாரி. இவர், தன் ஊழியர் தினேஷ்குமார், 19, என்பவரிடம், 1.73 கோடி ரூபாய் கொடுத்து, 4.5 கிலோ தங்க கட்டிகள் வாங்கி வர, சென்னை அனுப்பியுள்ளார்.பிராட்வே, என்.எஸ்.சி., போஸ் சாலைக்கு, நேற்று பணத்துடன் வந்த தினேஷ்குமார், அங்குள்ள நகை கடையில், 1.70 கோடி ரூபாய் கொடுத்து, 4.5 கிலோ தங்க கட்டிகள் வாங்கியுள்ளார்.
அப்போது, அவரை பின்தொடர்ந்த நால்வர் கும்பல், தங்களை டில்லி போலீஸ் என அறிமுகம் செய்து, தினேஷ்குமாரிடம் துப்பாக்கி இருப்பதாக கூறி சோதனை செய்தது. பின், கண் இமைக்கும் நேரத்தில், நால்வரும் தப்பிச் சென்றனர். அவர்கள் சென்ற பின், தினேஷ்குமார் தன் பையை பார்த்த போது, அதில், 4.5 கிலோ தங்கக்கட்டிகள் மாயமானது தெரியவந்தது.இது குறித்து, யானைகவுனி போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X