பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் ஒன்றிய சேர்மனாக சொர்ணாம்பாள் தேர்வு

Added : ஜன 12, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில், 1வது வார்டு கவுன்சிலர் சொர்ணாம்பாள், ஒன்றிய சேர்மனாக நேற்று பொறுப்பேற்றார்.திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில், எட்டு ஒன்றிய வார்டுகள் உள்ளன; ஒன்றிய சேர்மன் பதவி, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுஉள்ளது. மொத்தம் உள்ள, எட்டு வார்டுகளில், அ.தி.மு.க., நான்கு வார்டுகளிலும், தி.மு.க., மூன்று வார்டுகளிலும், சுயே., கவுன்சிலர் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர்.சுயே., கவுன்சிலர் தேவிஸ்ரீ அ.தி.மு.க.,வை ஆதரித்ததால், ஒன்றிய குழு தலைவர் பதவியை, அ.தி.மு.க., எளிதாக கைப்பற்றியுள்ளது. ஒன்றிய சேர்மன் பதவிக்கான மறைமுக தேர்வு, நேற்று காலை, 11:00 மணிக்கு, ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில், 1வது வார்டு கவுன்சிலர் சொர்ணாம்பாள் (அ.தி.மு.க..), 3வது வார்டு கவுன்சிலர் ரத்தினம்மாள் (தி.மு.க.,) வேட்புமனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து, ஓட்டுப்பதிவு நடத்தி, ஐந்து ஓட்டுகளை பெற்று, சொர்ணாம்பாள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.மாலையில் நடந்த தேர்தலில், 2வது வார்டு கவுன்சிலர் தேவிஸ்ரீ (சுயே.,), 6வது வார்டு கவுன்சிலர் ஜானகி(காங்.,) துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இவர்களில், தேவிஸ்ரீ துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.திருப்பூர் ஒன்றியத்தில், 1996 - 2001ல், நந்தினி சேர்மனாக இருந்தார். அதற்கு பிறகு, 18 ஆண்டுகள் கழித்து, பெண் ஒருவர் சேர்மனாக பொறுப்பேற்றுஉள்ளார்.-இரண்டே ஆண்கள்!இதுவரை இல்லாத அளவுக்கு, மொத்தம் உள்ள, எட்டு ஒன்றிய வார்டுகளில், இரண்டு ஆண் கவுன்சிலர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். ஒன்றிய சேர்மன், துணை தலைவர் என, இரண்டு பதவிகளையும், பெண்களே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X