பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி துணை தலைவர்; 10 பேர் போட்டியின்றி தேர்வு

Added : ஜன 12, 2020
Advertisement

பொங்கலுார்:பொங்கலுார் ஒன்றியத்தில் உள்ள, 16 ஊராட்சிகளில், 10 ஊராட்சி துணை தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.பொங்கலுார் ஒன்றியத்தில், 16 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சியில் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று காலை நடந்தது. இதில், அலகுமலை, வடக்கு அவிநாசிபாளையம், பொங்கலுார், காட்டூர், வடமலைபாளையம், பெருந்தொழுவு ஆகிய ஆறு ஊராட்சிகளில் மட்டும் போட்டி நிலவியது.இவற்றில், அலகு மலையில் வஞ்சியப்பகுமார், வடக்கு அவிநாசி பாளையத்தில் நாச்சிமுத்து, பொங்கலுாரில் ராதாகிருஷ்ணன், காட்டூரில் ரமேஷ், வடமலைபாளையத்தில் கந்தசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர். பெருந்தொழுவு ஊராட்சியில் இரண்டு வேட்பாளர்கள் சமமான ஓட்டு பெற்றனர். இதனால், குலுக்கல் முறை பின்பற்றப்பட்டது. இதில், சிவகாமி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.மீதமுள்ள பத்து ஊராட்சிகளில் துணைத்தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். உகாயனுார் செல்வராஜ், தொங்குட்டிபாளையம் பத்மா, நாச்சிபாளையம் பொன்னுசாமி, கண்டியன்கோவில் மூர்த்தி, மாதப்பூர் பாலசுப்ரமணி, கேத்தனூர் பொன்னுசாமி, இலவந்தி சுப்பிரமணி, தெற்கு அவிநாசிபாளையம் குமாரராஜா, கள்ளிப்பாளையம் பழனிசாமி, வாவிபாளையம் கவிப்பிரியா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X