கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தெரு ஓர வியாபாரிகள் கணக்கெடுப்பு விபரம்

Added : ஜன 12, 2020
Advertisement

சென்னை:சென்னையில், தெரு ஓர வியாபாரிகள் கணக்கெடுப்பு விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, மாநகராட்சி ஆணையருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாரிமுனை, என்.எஸ்.சி., போஸ் சாலையில், நடைபாதையை ஆக்கிரமித்து, சட்ட விரோதமாக வியாபாரம் செய்வதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'டிராபிக்' ராமசாமி வழக்கு தொடுத்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டவிரோதமாக நடைபாதைகளில் வணிகம் செய்ய, தடை விதித்தது.நீதிமன்ற உத்தரவுக்கு பின்னும், நடைபாதைகளில் தொடர்ந்து கடைகள் நடப்பதாகவும், அதிகாரிகள் துணை போவதாகவும் கூறி, அவமதிப்பு வழக்கை, 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்தார். இவ்வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.சென்னையில், ௧௫ மண்டலங்களில், தெரு ஓர வியாபாரிகள் கணக்கெடுப்பு முடிந்து விட்டதாக, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிக்கை தாக்கல் செய்தார்.
மனுதாரர் தரப்பில், 'சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால், பாதசாரிகளுக்கு கஷ்டமாக உள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.மாநகராட்சி சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், 'ராஜாஜி சாலையில் இருந்து கோவிந்தப்பநாயக்கன் தெரு வரை, நடைபாதையில் வாகனங்கள் நிறுத்த முடியாத வகையில், தடுப்பு அமைக்க திட்டம் உள்ளது. 29 லட்சம் ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாராகி உள்ளது. பிப்ரவரிக்குள் பணிகள் முடியும்' என்றார்.
இதையடுத்து, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தெரு ஓர வியாபாரிகள் விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்படி, மாநகராட்சி ஆணையருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, மார்ச், 10க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X