அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கோரம்' இல்லை!

Added : ஜன 12, 2020
Advertisement

திருப்பூர்:போதிய 'கோரம்' இல்லாததால், தாராபுரம் மற்றும் குண்டடம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட, மூன்று ஊராட்சிகளில், துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 265 ஊராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி குழுவுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணை தலைவர், 13 ஒன்றியங்களின் தலைவர் மற்றும் துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர்களுக்கான தேர்தல் நடந்தது.
தாராபுரம் ஒன்றியம், கொங்கூர் ஊராட்சி; குண்டடம் ஒன்றியம், பெல்லம்பட்டி ஊராட்சி மற்றும் எல்லப்பாளையம் புதுார் ஊராட்சிகளில், 'கோரம்' இல்லாமல், துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மறைமுக தேர்தல் மூலம், குழு தலைவர், துணை தலைவரை தேர்ந்தெடுக்க, 'கோரம்' அவசியம். அதாவது, மொத்த உறுப்பினரில், மூன்றில் ஒரு பங்கு கவுன்சிலர்கள் கட்டாயம் ஆஜராகியிருக்க வேண்டும். மூன்று ஊராட்சிகளில், அரை மணி நேரம் அவகாசம் வழங்கி, அதிகாரிகள் காத்திருந்தனர். கொங்கூர் ஊராட்சியில், மொத்த உறுப்பினர், ஒன்பது பேரில், நான்கு பேர் மட்டும் வந்திருந்தனர்.பெல்லம்பட்டியில், ஆறு உறுப்பினரில், மூன்று பேர் மட்டும் வந்திருந்தனர். எல்லப்பாளையம் புதுார் ஊராட்சி, 12 வார்டு உறுப்பினரில், ஆறு பேர் மட்டும் வந்திருந்தனர். மற்ற வார்டு உறுப்பினர்களை, 'மொபைல்' போன் மூலமாகவும் அழைக்க இயலவில்லை; 'ஸ்விட்ச் ஆப்' ஆகியிருந்தது. காத்திருப்பு நேரம் முடிந்ததும், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள, 265 ஊராட்சிகளில், மூன்று ஊராட்சிகளில், 'கோரம்' இல்லாமல், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீதியுள்ள, 187 ஊராட்சிகளில், துணை தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதியுள்ள, 75 ஊராட்சிகளில், மறைமுக தேர்தல் நடந்தது. மொத்தம், 55 ஊராட்சிகளில், பெரும்பான்மை ஓட்டுக்களை பெற்ற வேட்பாளர், துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டனர்.மொத்தம், 20 ஊராட்சிகளில், இரு வேட்பாளர் சம அளவு ஓட்டுக்களை பெற்றதால், குலுக்கல் முறையில், துணை தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X