தமிழ்நாடு

அமைதியாக நடைபெற்ற மறைமுக தேர்தல்: ஓய்ந்த உள்ளாட்சி தேர்தல்: அதிகாரிகள் நிம்மதி

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020
Share
Advertisement
அமைதியாக நடைபெற்ற மறைமுக தேர்தல்: ஓய்ந்த உள்ளாட்சி தேர்தல்: அதிகாரிகள் நிம்மதி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான, மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. அனைத்து இடங்களிலும், தேர்தல் அமைதியாக நடந்தது.திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், இரு வேட்பாளர் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான, 17 ஓட்டுகளில், 14 ஓட்டுக்களை பெற்று, 13வது வார்டு கவுன்சிலர் சத்தியபாமா, குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாலையில், துணை தலைவர் தேர்தல் நடந்தது. அவிநாசியில் உள்ள, 2வது மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் சிவகாமி, போட்டியின்றி துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


மறைமுக தேர்தல்

மாவட்டத்தில் உள்ள, 13 ஊராட்சி ஒன்றியங்களிலும், காலையில், தலைவர்களுக்கான தேர்தலும், மாலை 3:30 மணிக்கு, துணை தலைவர் தேர்தலும் நடந்தது. கூட்டரங்குகளை தாளிட்டு, போலீஸ் பாதுகாப்புடன், ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.ஊராட்சி ஒன்றியம்தாராபுரம், மடத்துக்குளம், மூலனுார், பல்லடம், பொங்கலுார், உடுமலை, ஊத்துக்குளி ஒன்றியங்களை, தி.மு.க., கைப்பற்றியுள்ளது.

அவிநாசி, குடிமங்கலம், திருப்பூர், வெள்ளகோவில் ஒன்றியங்களை, அ.தி.மு.க., கைப்பற்றியது. காங்கயம் மற்றும் குண்டடம் ஒன்றியங்களில், சுயே., கள் தலைவராக தேர்வாகியுள்ளனர். இவற்றில், தாராபுரம், குடிமங்கலம், காங்கயம், மடத்துக்குளம், மூலனுார், பொங்கலுார், வெள்ளகோவில் ஒன்றிய தலைவர் போட்டியின்றி தேர்வாகினர்.மற்ற இடங்களில், மறைமுக ஓட்டெடுப்பின் மூலம், தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
துணை தலைவர்கள்தாராபுரம், மடத்துக்குளம், மூலனுார், பல்லடம், பொங்கலுார், உடுமலை ஒன்றியங்களை, தி.மு.க., கைப்பற்றியுள்ளது. அவிநாசி ஒன்றிய துணை தலைவர் பதவியை, தே.மு.தி.க., கைப்பற்றியுள்ளது. குடிமங்கலம், குண்டடம், ஊத்துக்குளி, வெள்ளகோவில் ஒன்றியங்களை, அ.தி.மு.க., வென்றுள்ளது.


சுயே., வசம் காங்கயம்


மாவட்டத்தில், ஆறு ஒன்றியங்களின் தலைவர், துணை தலைவர் பதவிகளை, தி.மு.க., கைப்பற்றியுள்ளது. ஊத்துக்குளி தலைவராக தி.மு.க.,வும், துணை தலைவராக, அ.தி.மு.க.,வும் வெற்றி பெற்றுள்ளன. காங்கயத்தில், தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய இரு பதவிகளும் சுயே., கவுன்சிலர் வசம் சென்றுள்ளன.


முடிந்தது ஊரக தேர்தல்

இதுகுறித்து உள்ளாட்சி தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'மூன்று ஊராட்சிகளில், ஒத்திவைக்கப்பட்டுள்ள துணை தலைவர் தேர்தல், மற்றொரு நாளில் நடக்கும்.மாநில தேர்தல் கமிஷன் அறிவித்த பிறகு, தாராபுரம் - பொன்னாபுரம் ஊராட்சி, மூலனுார் -கருப்பன்வலசு ஊராட்சி களில், இரண்டு வார்டுகளுக்கான தேர்தல் நடத்தப்படும். தற்போது, முழுமையான தேர்தல் நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X