பொது செய்தி

தமிழ்நாடு

இன்று முதல் சிறப்பு இணைப்பு பஸ் இயக்கம்

Added : ஜன 12, 2020
Share
Advertisement

சென்னை:பொங்கல் பண்டிகையைக் கொண்டாட, சொந்த ஊர் செல்வோருக்கு வசதியாக, இன்று முதல் சிறப்பு பஸ்களும், இணைப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
பொங்கல் பண்டிகையை கொண்டாட, சொந்த ஊர் செல்ல வசதியாக, பெங்களூரு, திருவனந்தபுரம், புதுச்சேரி, திருப்பதி உள்ளிட்ட வெளி மாநில நகரங்களில் இருந்து, இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல், சென்னை, கோவை, திருப்பூர், சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழக தொழில் நகரங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.சென்னையில் இருந்து வெளியூர் செல்ல வசதியாக, மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர், கோயம்பேடு ஆகிய இடங்களில் சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னையில் இருந்து, வெளியூர்களுக்கு வழக்கமாக, 2,225 பஸ்கள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல வசதியாக, இன்று முதல், 14ம் தேதி வரை, தினமும்தலா, 3,875 பஸ்கள் இயக்கபடும். வெவ்வேறு பஸ் நிலையங்களுக்கு சென்று பயணிக்கும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில், இன்று முதல், தினமும், 310 இணைப்பு பஸ்களை இயக்க உள்ளது. இவை இரவு, பகல் என, 24 மணி நேரமும் இயங்கும். இவை கோயம்பேடு, செங்குன்றம், தாம்பரம், மாதவரம், உயர் நீதிமன்றம், திருவொற்றியூர், அடையாறு, கோவளம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து புறப்படும். அதேபோல், ஸ்ரீபெரும்புதுார், திருப்போரூர், தி.நகர், சோழிங்கநல்லுார், மாமல்லபுரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்தும் புறப்படும். மேலும், திருவான்மியூர், வடபழநி, கேளம்பாக்கம், திரு.வி.க., நகர், குன்றத்துார், கண்ணகி நகர், வள்ளலார் நகர், மணலி, வண்டலுார் ஆகிய இடங்களில் இருந்தும் புறப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X