தமிழ்நாடு

மறுபயன்பாடுள்ள பொருட்களை மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் திட்டம் துவக்கம்

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020
Advertisement
மறுபயன்பாடுள்ள பொருட்களை மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் திட்டம் துவக்கம்

சென்னை:மறு பயன்பாடுள்ள பொருட்களை, மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் வகையில், 'ஸ்வாப் ஷாப்' திட்டம், அடையாறு மண்டலத்தில் இன்று துவங்குகிறது.
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:மாநகராட்சியில், தினசரி, 5,200 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. மக்கும், மக்காத குப்பை தரம் பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பை உரம் தயாரிக்கவும், மக்காத குப்பை மறுசுழற்சியாளர்களிடம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள குப்பை, கொடுங்கையூர், பள்ளிக்கரணை குப்பை கிடங்களில் கொட்டப்பட்டு வருகின்றன.குப்பை கொட்டும் வளாகங்களுக்கு, திடக்கழிவுகள் கொண்டு செல்வதை குறைத்து, நிலம் மாசுபடுவதை தவிர்க்க, பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மறு பயன்பாடு செய்யும் நிலையில் உள்ள பொருட்களை, பொதுமக்கள் மீண்டும் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்ய, அடையாறு மண்டலத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, பெசன்ட் நகர் அருகே, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாய கூடத்தில், இன்று மற்றும் நாளை, 'ஸ்வாப் ஷாப்' என்ற திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், மறு பயன்பாடு உள்ள பொருட்களை பயன்படுத்தி, கழிவுகளை குறைக்க முடியும்.பொதுமக்கள், தங்களிடம் உள்ள, தேவையற்ற, மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள புத்தகங்கள், சலவை செய்யப்பட்ட ஆடைகள், பாத்திரங்கள், சமையல் பொருட்கள், மின்னணு பொருட்கள் உள்ளிட்டவற்றை கொடுத்து, பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இலவசமாகவும் வழங்கலாம்.இந்த தேதிகளில், சமுதாய கூடத்திற்கு வர முடியாதவர்கள், அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட, 170 முதல், 182 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள சேகரிப்பு மையங்களில் வழங்கலாம். மேலும், விபரங்களை, www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X