பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 24ம் தேதி ஏற்றுமதி, இறக்குமதி பயிற்சி

Added : ஜன 12, 2020
Share
Advertisement

சென்னை:சென்னையில், வரும், 22ம் தேதி முதல், 24ம் தேதி வரை, ஏற்றுமதி, இறக்குமதி சட்ட திட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. இதில், 18 வயது நிரம்பிய, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, இருபாலாரும் சேரலாம்.சென்னை, ஈக்காட்டுதாங்கல், பார்த்தசாரதி கோவில் தெரு, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள், வங்கி நடைமுறைகள், காப்பீடு குறித்த தகவல்கள் போன்றவை குறித்து, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.பயிற்சி பெற விரும்புவோர், தங்கள் பெயரை நேரிலோ, www.editn.in இணையதளத்தின் வழியாகவோ, பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 86681 02600, 94445 57654 எண்களை தொடர்பு கொள்ளவும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X