பொது செய்தி

தமிழ்நாடு

மரங்களுக்கு மருந்து வைத்த மாணவர்கள்

Added : ஜன 12, 2020
Share
Advertisement
 மரங்களுக்கு மருந்து வைத்த மாணவர்கள்

சென்னை:பல்கலையில் உள்ள மரங்களை பாதுகாக்க, மருந்துகள் கலந்த சுண்ணாம்பை, மருத்துவ மாணவர்கள் பூசினர்.
கிண்டியில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில், 160க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இதில், ஆல, அரச, வேப்ப, புங்க, பூவரசு, அசோக, நாவல், மா, புளியமரங்கள் உள்ளிட்டவை உள்ளன. இந்த மரங்கள், கரையான் பூச்சிகளால் பாதிக்கப்படாமல் பாதுகாக்க, மருந்துகள் கலந்த சுண்ணாம்பு பூசும் பணி, பல்கலை துணைவேந்தர் சுதா சேஷய்யன் தலைமையில் நேற்று நடந்தது. பேராசிரியர்கள் மாணவர்கள், ஒவ்வொரு மரத்திற்கும் மண் பரப்பிலிருந்து, 4 அடி உயரத்திற்கு, மருந்துகள் கலந்த சுண்ணாம்பு பூசினர். இந்த பணியில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X