பொது செய்தி

தமிழ்நாடு

புத்தக காட்சியில் விரைவில் கீழடி மூதாதையர்: 'செட்' வடிவமைப்பாளர் மோகன்தாஸ் உற்சாகம்

Added : ஜன 12, 2020
Share
Advertisement
உலக வரலாற்று ஆய்வாளர்களின் உதடுகள் முணுமுணுக்கும் ஒற்றைச்சொல் கீழடி. 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் வாழ்வியலை, கண்முன் நிறுத்தும் நிகழ்கால சாட்சி. இதை வெளிக்கொணர்ந்த, மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை, தமிழர்கள் மறக்க மாட்டர். மத்திய தொல்லியல் துறை மண்ணை மூடி, துாசி தட்டி கிளம்பிய போது, நீதிமன்ற உத்தரவை ஏற்று, கீழடியை
 புத்தக காட்சியில் விரைவில் கீழடி மூதாதையர்: 'செட்' வடிவமைப்பாளர் மோகன்தாஸ் உற்சாகம்

உலக வரலாற்று ஆய்வாளர்களின் உதடுகள் முணுமுணுக்கும் ஒற்றைச்சொல் கீழடி. 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் வாழ்வியலை, கண்முன் நிறுத்தும் நிகழ்கால சாட்சி. இதை வெளிக்கொணர்ந்த, மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை, தமிழர்கள் மறக்க மாட்டர்.
மத்திய தொல்லியல் துறை மண்ணை மூடி, துாசி தட்டி கிளம்பிய போது, நீதிமன்ற உத்தரவை ஏற்று, கீழடியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர், தமிழக தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் உதயச்சந்திரன். இவரால் தான், ஊடகங்கள் மட்டுமின்றி, சாமானியர்களின் பேசு பொருளாகவும் கீழடி மாறியது. அவர் தலைமைக்குப் பின், தமிழக தொல்லியல் துறை, பீடுநடை போடுகிறது. அதில் ஒன்று தான், சென்னை புத்தகக்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள, 'கீழடி' அரங்கு. அதை வடிவமைத்தவர் ஜே.மோகன்தாஸ்.
அவரிடம் பேசியதிலிருந்து...மோகன்தாஸ் பற்றி?
நான் சாலிகிராமத்தில் பிறந்த சென்னைவாசி. 10ம் வகுப்பு வரை தான் படிப்பு. பல்வேறு மாற்றங்களுக்குப் பின், தற்போது, 'செட்' போடும் பணிகளை செய்து வருகிறேன்.
'செட்' போடும் தொழிலுக்கு வந்தது எப்படி?
குடும்ப சூழல், எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்றிருந்தது. அதற்காக, பல வேலைகள் பார்த்தேன். அதில் ஒன்று தான், பொருட்காட்சிகளுக்கு, 'செட்' போடும் ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்ததும்.அவர், பெரும்பாலும், அரசு துறைகளுக்கான அரங்குகளை அமைப்பார். அவரிடம், ஆபீஸ் பாயாக வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது, செட் போடும் அனைவருடனும் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்படித் தான், எனக்கு இந்த தொழில் அறிமுகமானது.
செட் போடுவது என்பது தனித்துறை இல்லையே... நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
ஆமாம், கார்பென்டர், ஆர்ட்டிஸ்ட், மோல்டர் என, எட்டுக்கும் மேற்பட்ட துறையினர் ஒருங்கிணைவது தான் இந்த துறை. நான், அனைத்து துறையில் இருந்தவர்களுடனும் பழகி இருக்கிறேன். அனைவருக்கும் உதவியாளராக இருந்திருக்கிறேன். அனைத்திலும் எனக்கு பரிட்ச்சயம் உண்டு.
கீழடி செட் போடும் வாய்ப்பு எப்படி கிட்டியது?
கடந்த ஆண்டு, சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில், ஒரு கண்காட்சி நடந்தது. அதற்கான செட் போடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை சிறப்பாக செய்தேன். அந்த துறையின் இயக்குனராக இருந்தவர் உதயச்சந்திரன்.அவர், கடந்த ஆண்டின் இறுதியில், மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் நடந்த தமிழ் மாநாட்டிற்காக, கீழடி குறித்த செட் போடும் எண்ணத்தை சொன்னார். அப்படித் தான், எனக்கு அந்த வாய்ப்பு கிட்டியது.
உங்களுக்கு தொல்லியல் துறை பற்றி என்ன தெரியும்?
எனக்கு அந்த துறை பற்றி எதுவும் தெரியாது. ஆனால், அத்துறையினர், என்னை, கீழடிக்கு அழைத்துச் சென்று, அகழாய்வு நடக்கும் இடத்தை காட்டி விளக்கினர். அதன் ஒவ்வொரு செயல்பாடுகளையும், எனக்குப் புரியும் படி, அத்துறையின் துணை இயக்குனர் சிவானந்தம் எனக்கு விளக்கினார்.அதை மனதில் பதித்துக் கொண்டேன். பல்வேறு படங்களும், வீடியோக்களும் எடுத்துக் கொண்டோம். அப்படித் தான், எனக்கு தொல்லியல் துறை குறித்த அறிமுகம் கிடைத்தது.
கீழடி செட் போட்ட அனுபவம் பற்றி?
செட் போடுவதற்கு முன், காட்சிக் கூடத்தின் அளவுகளைப் பார்த்து, அதற்கேற்ப செட் போட்டோம். அது, அனைவரையும் கவர்ந்தது.
செட் போடும் முன் எதையெல்லாம் கவனிப்பீர்கள்?
செட் போட வேண்டிய இடம், அளவு; காட்சியில் முன்னிலைப்படுத்த வேண்டிய பொருள்; கண்காட்சி நிரந்தரமானதா; தற்காலிகமானதா என்பதை எல்லாம் கேட்டு அறிந்து, பின் தான் ஒரு முடிவுக்கு வருவோம்
.சென்னை புத்தக கண்காட்சியில் என்ன சிறப்பு?
கீழடி அகழாய்வை கண்முன் நிறுத்த வேண்டும் என்பதில், கண்காணிப்பாளர் உதயச்சந்திரன் சமரசம் செய்து கொள்ளவில்லை. அவர், ஒவ்வொன்றையும் பார்த்துப், பார்த்து ஆலோசனை வழங்கினார். அவர் அறிவுரைப்படி, இந்த காட்சிக் கூடத்தை அமைத்துள்ளோம்.இதற்காக, முதலில், களிமண்ணில் உருவம் செய்து, அதன்பின் பிளாஸ்டர் ஆப் பாரீசில் மோல்ட் செய்தோம். அதன்பின், பைபர், போம் போன்ற பொருட்களில் இந்த காட்சிகளை வடிவமைத்தோம்.பின், அசலைப் போலவே, வர்ணம் தீட்டினோம். இதில் உள்ள உறைகிணறு, மண்ணில் புதைந்த பானை, வடிகட்டும் நீர்வழித்தடம், தொழிற்சாலைகள், அகழாய்விடத்தில் உள்ள மண்ணடுக்கு, மர வேர்கள் என, ஒவ்வொன்றையும் மிகக்கவனமாக செய்தோம். இதில் உள்ள ஒவ்வொன்றையும் பார்வையாளர்கள் தொட்டு உணரலாம்.
உங்களின் படைப்பை அதிகாரிகள் பாராட்டவில்லையா?
கண்காட்சியைத் தொடங்கி வைத்த முதல்வர் இ.பி.எஸ்., அனைத்தையும் தொட்டுப் பார்த்து ரசித்தார். விழா மேடையில், கீழடி அரங்கை வெகுவாக பாராட்டினார். அது, எனக்கு மட்டுமல்ல, என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் கிடைத்த அங்கீகாரம். அதுமட்டுமல்ல, தொல்லியல் துறைக்கு கிடைத்த மரியாதையாகவும் பார்க்கிறேன்.
இந்த காட்சிக்கூடத்தில் இன்னும் ஏதேனும் செய்ய வேண்டி உள்ளதா?
இதை செய்ய எங்களுக்கு, ஒரு வாரம் தான் அவகாசம் கிடைத்தது. தற்போது, கீழடியில் கிடைத்த உண்மையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதைப்பற்றிய செட் தான் இங்குள்ளது. அங்குள்ள வாழ்வியலை விளக்கும் காட்சியை அமைக்க உள்ளோம். விரைவில், கீழடி மூதாதையர், சென்னை புத்தக காட்சியில் தோன்றுவர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X