சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி:இருவர் மீது வழக்கு

Added : ஜன 12, 2020
Advertisement

ஆண்டிபட்டி:அரசு வேலை வாங்கித்தருவாக கூறி பணம் பெற்று ஏமாற்றிய இருவர் மீது
ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆண்டிபட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் தமிழ்அமுதன் 26. சில ஆண்டுக்கு முன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் தற்போது ஆண்டிபட்டியில் உள்ளார். வெளிநாட்டில் இருந்தபோது சென்னை ஆவடியை சேர்ந்த சரவணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர் மூலம் போனில் அறிமுகமான சென்னை பேரூரை சேர்ந்த கிேஷார் என்பவர் தான் ஒரு ஐ.ஏ.எஸ்.,அதிகாரி என்றும் ,சென்னை தலைமை செயலகத்தில் வேலைபார்த்து வருவதாகவும் கூறியதை உண்மை என்று நம்பி வந்துள்ளார்.
இவர் மற்றொரு நபரான சுபாஷ் என்பவரை போனில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
தமிழ் அமுதன் உறவினர், நண்பர்கள் சிலருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.
அதற்கான செலவுத்தொகையை சரவணன் மற்றும் கிேஷார் ஆகியோரின் வங்கி கணக்கில் செலுத்தவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி பல்வேறு தவணைகளில் ரூ. 20 லட்சம் வரை இருவரின் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். ஆனால் யாருக்கும் அரசு வேலை பெற்றுத்தரவில்லை. வங்கி கணக்கில் பணம் பெற்றவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்தபோது அவர்கள் போலியானவர்கள் என்பதை தமிழ்அமுதன் தெரிந்துகொண்டார்.
வழக்கு

பணத்தை கேட்டபோது போனில் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்அமுதன் ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத்
தொடர்ந்தார். வழக்குப்பதிவுசெய்ய ஆண்டிபட்டி போலீசாருக்கு நீதித்துறை நடுவர் மகேந்தர வர்மா உத்தரவிட்டார். அதன்படி சரவணன், கிேஷார் மீது போலீசார் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X