பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கையில் மின்னும் அரங்குகள்

Added : ஜன 12, 2020
Advertisement
 இயற்கையில் மின்னும் அரங்குகள்

சென்னை:சென்னை புத்தக கண்காட்சி, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான நேற்று காலை, 11:00 மணிக்கு கண்காட்சி துவங்கியது.
திறந்தவெளி அரங்கில், அ.முகமது அப்துல்காதர் எழுதிய, 'புதிதாய்ப் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்' என்ற, தன்னம்பிக்கை நுால் வெளியீடு நடந்தது.உள் அரங்கங்களில், கதை, நாவல், வரலாறு, குழந்தைகளுக்கான புத்தகங்கள், தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. சில பதிப்பகங்கள், 10 ரூபாய் கொண்ட, 5 புத்தகம் வாங்கினால், ஒரு புத்தம் இலவசமாக வழங்குகின்றன.சில அரங்கங்கள், இயற்கை சார்ந்த பொருட்களால், அலங்கரிக்கப்பட்டு உள்ளன. இரும்பு அலமாரிக்கு பதில், மூங்கில் குச்சி அலமாரியில் அடுக்கி வைத்த நுால்கள், பார்வைக்கு அழகு கூட்டியது.சில அரங்கில் தென்னை, பனை மரங்களில் கிடைக்கும் பொருட்களில் இருந்து, வண்டு, கொக்கு, குருவி, காக்கை கூடு, தேன்கூடு, டைனோசர் போன்ற விலங்குகள் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. இவை, குழந்தைகளை கவர்ந்தது.கீழடி அகழாய்வு தொல்பொருட்கள் காண்காட்சியில், மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு, 'மெய்நிகர்' தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட, 'டிஜிட்டல்' காட்சியை, நீண்ட வரிசையில் நின்று கண்டுகளித்தனர்.
அதோடு, பார்வையாளர்களை கீழடி அகழாய்வு திரையில் நிற்க வைத்து, அதற்குள் நிற்பது போன்ற புகைப்படம், அவரவர், 'வாட்ஸ்ஆப்' எண்ணுக்கு இலவசமாக அனுப்பப்பட்டது.மேலும், கீழடியில் எடுத்த, 10 வகையான தொல்பொருட்களை, '3டி' வடிவில் பார்க்க வசதி செய்யப்பட்டது.
நான், 20 ஆண்டுகளாக, புத்தக கண்காட்சிக்கு வருகிறேன். இந்த ஆண்டு, தமிழ் இலக்கியம், பொது அறிவு சார்ந்த புத்தகங்கள் அதிகம் வாங்கினோம். முன்பை விட, அதிக எழுத்தாளர்களின் புத்தகங்கள் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குடும்ப வருவாயில், குறிப்பிட்ட தொகையை புத்தகங்கள் வாங்க ஒதுக்குகிறோம்.-ஆர்.சித்ரா, 55, வில்லிவாக்கம்
மூன்றாவது முறையாக, புத்தக கண்காட்சிக்கு வருகிறேன். அப்பா, புத்தகம் வாங்க, 1,000 ரூபாய் தந்தார். அதில், நாவல், வரலாற்று புத்தகங்கள் வாங்கினேன். வேறு ஒரு உலகத்திற்கு சென்ற உணர்வு ஏற்பட்டது. அடுத்த ஆண்டு வாங்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, பேப்பரில் குறிப்பு எடுத்துள்ளேன்.-எம்.ஷீதா, 10 மடிப்பாக்கம்.
மூன்றாண்டு இடைவெளிக்கு பின், இப்போது தான் புத்தகம் வாங்க வந்தேன். குழந்தைகளுக்கான கதை, வாழ்வியல் புத்தகங்கள் அதிகம் வாங்கினேன். கீழடி சென்று வந்த உணர்வு, கண்காட்சியில் கிடைத்தது. இயற்கையான பொருட்களில், அரங்கம் அமைத்திருந்தது கூடுதல் மகிழ்ச்சி அளித்தது.-ஜெ.முகமது இர்பன், 31 போரூர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X