தமிழ்நாடு

தேனி மாவட்டத்தில் 3,503 பேர் எஸ்.ஐ., தேர்வு எழுத ஏற்பாடு இன்று 4 மையங்களில் நடக்கிறது

Added : ஜன 12, 2020
Advertisement

தேனி, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் நடந்தும் சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ.,) 2019 பணிக்கு எழுத்து தேர்வு தேனி மாவட்டத்தில் பொது விண்ணப்பதாரர்களுக்கு இன்றும், காவல்துறையில் பணிபுரியும் போலீசாருக்கு நாளையும் (13 ம்தேதி) நடக்கிறது.இதற்காக மாவட்டத்தில் தேனி கம்மவார் கலை அறிவியல் கல்லுாரி, கம்மவார் பாலிடெக்னிக் கல்லுாரி, நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி, நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி 3,134 பொது விண்ணப்பதாரர்களுக்கும், காவல்துறையை சேர்ந்த 369 பேருக்கு கம்மவார் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடக்கிறது. மொத்தம் 3,503 விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு எழுதுகின்றனர்.எழுத்து தேர்விற்கு வருவோர் ஹால் டிக்கெட், தேர்வு அட்டை, பால்பாயிண்ட் பேனா ஆகியவற்றை தவிர அலைபேசி, எலக்ட்ரானிக் பொருட்கள், புத்தகங்கள் என எதையும் எடுத்து வரக்கூடாது. ஒவ்வொரு தேர்வு மையத்தின் நுழைவு வாயிலிலும் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை எண் விபரங்கள் ஒவ்வொரு தளத்திலும் வைக்கப்பட்டிருக்கும். ஏதேனும் சந்தேகம் ஏற்படின் எஸ்.பி., அலுவலகத்தை 04546-253 101, அலைபேசி 94981 01570 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் ,என , சாய்சரண் தேஜஸ்வி எஸ்.பி., தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X