சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் விரல் உடைப்பு வக்கீல்கள் மூவர் கைது

Added : ஜன 12, 2020
Advertisement
 போலீஸ் விரல் உடைப்பு வக்கீல்கள் மூவர் கைது

ஆதம்பாக்கம்:குடி போதையில் தகராறு செய்து, போலீசார் விரலை உடைத்த வழக்கறிஞர்கள் மூவர், கைது செய்யப்பட்டனர்.
ஆதம்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் அங்கமுத்து, 52. நேற்று முன்தினம் இரவு, அவர் பணியில் இருந்த போது, மேற்கு கரிகாலன் தெருவில் தகராறு நடப்பதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.ரோந்து வாகனத்தில் போலீசார் அங்கு சென்று, தகராறில் ஈடுபட்டவர்களை கலைந்து போக எச்சரித்தனர். இதில், போலீசாருக்கும், அந்த மூவருக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அப்போது, மூவரும் அங்கமுத்துவின் கையை முறித்து, கட்டை விரலை உடைத்தனர். அவர் வலி தாங்காமல் கதறியதை பார்த்து, அக்கம்பக்கத்தினர், மூவரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், செங்குன்றத்தைச் சேர்ந்த பாலாஜி, 32, கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த சக்திவேல், 33, தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த மருதுபாண்டி, 31, என்பதும், வக்கீல்கள் என்பதும் தெரியவந்தது.ஆதம்பாக்கம் போலீசார், மூவரையும் நேற்று சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X