புகையிலை விற்றவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

Added : ஜன 12, 2020
Advertisement

தேனி,தேனியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தவருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து முதன்முறையாக அங்கேயே வசூலிக்கப்பட்டது.அயோடின் கலக்காத உப்பு விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. பல கடைகளில் அயோடின் கலக்காத உப்புகளை பாக்கெட்டுகளில் ஒரு கிலோ, அரைகிலோ என விற்கின்றனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தால் கால்நடைகளுக்கு என கூறி சமாளித்தனர். சிலர் கருப்பட்டி என போலியாக சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட கருப்பட்டி விற்பனை செய்கின்றனர். இது குறித்து ஆய்வு நடத்த உணவு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டது.தேனி உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நவநீதன், தேனி உணவு உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜ் தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தேனி வாரச்சந்தை, எஸ்.கே. நாடார் தெரு, மெயின் ரோட்டில் உள்ள கடைகளில்சோதனை நடத்தினர். இதில் பலசரக்கு கடைகள், கருப்பட்டி கடைகள், சந்தையில் உள்ள கடைகள் என 48 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.தரமில்லாத உணவு பொருட்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் என ரூ.45 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்தனர். பலருக்கு நோட்டீஸ் வினியோகித்தனர். தடை செய்யப்பட்ட புகையிலை 4.100 கிலோ வைத்திருந்த இளங்கோவன் டிரேடர்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 5 ஆயிரம் அபராதமாக விதித்து, அங்கேயே வசூலிக்கப்பட்டது. முதன்முறையாக 'ஸ்பாட்பைன் 'விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. இதுபோன்ற சோதனைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X