கர்ப்பிணி வயதை உறுதி செய்ய உதவிய அசாம் போலீசார்

Added : ஜன 12, 2020
Advertisement

மூணாறு அசாம் மாநிலம் , தெரங்கு மாவட்டம் சாம்தீலா பகுதியைச் சேர்ந்த இளம் தம்பதியினர், மூணாறு அருகே கே.டி.எச்.பி., கம்பெனிக்குச் சொந்தமான சொக்கநாடு எஸ்டேட், வட்டக்காடு டிவிஷனில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.தற்போது பெண் எட்டு மாதம் கர்ப்பிணி என்பதால், மூணாறில் உள்ள டாடா மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனைக்கு கணவருடன் சென்றார்.அடையாள அட்டையில் பெண்ணின் வயது 14 என இருந்ததால் மருத்துவமனை நிர்வாகம்போலீசாருக்கு தகவல் அளித்தனர். மருத்துவ பரிசோதனை முடிந்து தம்பதியினர் வீட்டிற்குச் சென்றனர். தேவிகுளம் எஸ்.ஐ., திலீப்குமார் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கானபிங்' போலீசார் ஆகியோர் தம்பதியினரைத்தேடி வீட்டிற்குச்சென்றனர். போலீசார் வயது குறித்து கூறினர். அதனை மறுத்த பெண், தனக்கு வயது இருபது என தெரிவித்தபோதும், அதனை உறுதிபடுத்துவதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை.தேவிகுளம் போலீசார், சாம்தீலா பகுதி போலீசாரை தொடர்பு கொண்டு, பெண் பிறப்புச் சான்றிதழை பெற்றனர்.அதில் பெண் பிறந்த ஆண்டு 2000ம் என குறிப்பிடப்படிருந்தது. அதன்பின் போலீசாரும், தம்பதியினரும் நிம்மதி அடைந்தனர்.------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X