ரோட்டோர பள்ளத்தால் விபத்து | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோட்டோர பள்ளத்தால் விபத்து

Added : ஜன 12, 2020

ஆண்டிபட்டி, ஆண்டிபட்டி- - தெப்பம்பட்டி இடையே பிச்சம்பட்டி காலனி, கதிர்நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களில் ரோட்டின் ஓரத்தில் உள்ள பள்ளத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.ஆண்டிபட்டியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இந்த ரோடு வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. அவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாயாண்டிபட்டி, கதிர்நரசிங்கபுரம் ஆகிய ஊர்களில் ரோடு குறுகலாக உள்ளது. பிச்சம்பட்டி காலனி, கதிர்நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களில் ரோட்டிற்கும் தரைதளத்திற்கும் இரண்டு அடி வரையில் பள்ளம் உள்ளது. இரவில் வரும் வாகனங்கள் ரோட்டின் ஓரத்தில் ஒதுங்கும்போது, பள்ளத்தில் இறங்கி விபத்து ஏற்படுகிறது. இப்பகுதியில் பள்ளத்தை சரி செய்யவோ அல்லது தடுப்பு சுவர் கட்டவோ நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.---------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X