சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை, பணம் திருட்டு

Added : ஜன 12, 2020
Advertisement

அம்பத்துார்: அம்பத்துார், காந்தி நகர், தாலுகா அலுவலகம் சாலையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 65; ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். அவர், 9ம் தேதி, குடும்பத்தினருடன், உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை, 9:00 மணி அளவில், மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது, பூட்டு உடைக்கப்பட்டு, 1.20 லட்சம் ரூபாய், 3 சவரன் நகை திருடு போயிருந்தன. அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் அடித்து கொலை
திருவொற்றியூர்: திருவொற்றியூர், மாட்டுமந்தை மேம்பாலம் அருகே, பிளாட்பாரத்தில் தங்கி, கன்னியப்பன், 78, என்ற முதியவர், கொட்டகை அமைப்பது, பால் கறப்பது போன்ற வேலைகள் செய்தார்.இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாதவன், 55, என்பவருக்கும், இரண்டு மாதங்களாக, பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு, திடீரென இருவரும் ஆவேசமாக மோதிக்கொண்டனர். இதில், மாதவன், முதியவர் கன்னியப்பனை திண்ணையில் இருந்து கீழே தள்ளியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, கன்னியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருவொற்றியூர் போலீசார், மாதவனை கைது செய்தனர்.
160 மொபைல் போன்கள் ஒப்படைப்பு
மயிலாப்பூர்: மயிலாப்பூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில், மொபைல் பறிப்பு, திருட்டு அடிக்கடி நடந்தது. போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். சமீபத்தில், 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 160 மொபைல் போன்களை, போலீசார் மீட்டனர். நேற்று காலை, மீட்கப்பட்ட மொபைல்களின் உரிமையாளர்களிடம், மயிலாப்பூர் துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மொபைல்களை நேற்று ஒப்படைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X