சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலன் இறப்பால் காதலி தற்கொலை

Added : ஜன 12, 2020
Share
Advertisement

கானத்துார்: பனையூர், ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்த மதியழகன் மகள் செல்வி, 18; துணிக்கடையில் பணி புரிந்தார். அங்கு பணிபுரிந்த ஒரு வாலிபரை காதலித்துள்ளார். அவர், சில தினங்களுக்கு முன், விபத்தில் பலியாகி உள்ளார். இதில், மனமுடைந்த செல்வி, நேற்று, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கானத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.மயிலாப்பூர்: மயிலாப்பூர், பி.வி.கோவில் தெருவைச் சேர்ந்தவர், பாலசந்தர், 29; மேடையில் நடனம் ஆடுபவர். இவர், நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
சாலை விபத்தில் பெண் பலி
மந்தைவெளி: திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் சாலையைச் சேர்ந்தவர் மீனாட்சி, 55; துப்புரவு ஊழியர். நேற்று காலை, மந்தைவெளி பஸ் நிலையம் அருகே, துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதி நிற்காமல் சென்றது. பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X