பொது செய்தி

தமிழ்நாடு

இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

Added : ஜன 12, 2020
Advertisement

சென்னை:பொங்கல் பண்டிகையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை தொடர்ந்து, பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, இன்று முதல், நாளை மறுநாள் வரை, பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.இந்த பேருந்துகள், கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ரயில் நிலையம், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்கப்பட உள்ளன.அதிக பேருந்துகள் இயக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சிறிது நேரம் பேருந்துகளை நிறுத்தி, பின், சென்னை நகருக்குள் அனுப்பப்படும் என, போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:அரசு பேருந்துகள்
● வண்டலுார் மேம்பாலம், இரும்புலியூர், மதுரவாயல், டோல் பிளாசா, கார்த்திகேயன் நகர், எம்.ஜி.ஆர்., யூனிவர்சிட்டி, நெற்குன்றம், பூந்தமல்லி பை - பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, கோயம்பேடு நோக்கி வரும் பேருந்துகள், மதுரவாயல் மேம்பாலம் அருகே நிறுத்தி வைக்கப்படும்
அதேபோல், வானகரம், இயேசு அழைக்கிறார் வளாகம், கோயம்பேடு மேம்பாலம், மலர் வணிக வளாகம் ஆகிய இடங்களில் நிறுத்தி வைத்து, போக்குவரத்திற்கு ஏற்ப பணிமனைக்கு அனுமதிக்கப்படும்ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு மார்க்கெட் இ - சாலையில் உள்ள நிறுத்தத்தில் இருந்து, பி சாலை வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று, அங்கிருந்து வெளிவட்ட சாலை வழியாக, ஊரப்பாக்கம் சென்று, அங்கிருந்து செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்லலாம்
ஆம்னி பேருந்துகள், பூந்தமல்லி பை - பாஸ் சாலை மற்றும் 100 அடி சாலையில் வடபழநி நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
கூடுதலான ஆம்னி பேருந்துகள், ஸ்ரீவாரி திருமண மண்டபம் பின்புறம், சிவாஜி பார்க்கில் நிறுத்தி வைக்கப்பட்டு, இயேசு அழைக்கிறார் வளாகம் முன், தற்காலிக நிறுத்தத்தில் இருந்து பயணியரை ஏற்றிக்கொண்டு, ஊரப்பாக்கம் வழியாக செல்லலாம்சரக்கு வாகனங்கள்
மூன்று நாட்களும், பகல், 2:00 மணி முதல் நள்ளிரவு, 2:00 மணி வரை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மார்க்கங்களில் இருந்து, சென்னை வரும் கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது
அந்த நேரத்தில், செங்கல்பட்டு மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள், வண்டலுார் பாலம் வழியாக, சென்னை வெளிவட்ட சாலையில், நெமிலிச்சேரியில் சி.டி.எச்., சாலை அடைந்து, பாடி மேம்பாலம் வழியாக ஜி.என்.டி., சாலை மாதவரம் ரவுண்டனா வழியாக சென்னைக்கு வரலாம்.
திருவள்ளூர் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் மார்க்கமாக வரும் வாகனங்கள், நசரத்பேட்டை இடது புறம் திரும்பி, சென்னை வெளிவட்ட சாலையில் வழியாக சென்னை வரலாம்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கோயம்பேடு நோக்கி வரும் வாகனங்கள், நடுவாங்கரை சந்திப்பு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை மேம்பாலம் வழியாக, அண்ணா நகர், 3, 2வது அவென்யூ, சாந்தி காலனி, அம்பத்துார் எஸ்டேட் சாலை, மாந்தோப்பு வழியாக மாற்று பாதையில் செல்லலாம்தனியார் வாகனங்கள்.
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள தனியார் வாகனங்கள், ஈ.வெ.ரா., சாலையில் மதுரவாயல் நோக்கி செல்பவர்கள், நடுவாங்கரை சந்திப்பு, சாந்தி காலனி, 13வது பிராதன சாலை, 2வது அவென்யூ சாலை எஸ்டேட் சாலை, மாந்தோப்பு, வானகரம் வழியாக மாற்று பாதையில் செல்ல வேண்டும்.
வடபழநி நோக்கி செல்லும் தனியார் வாகனங்கள், என்.எஸ்.கே., நகர் சந்திப்பு, ரசாக் கார்டன், எம்.எம்.டி.ஏ., காலனி, வினாயகாபுரம் வழியாக செல்லலாம்இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X