பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டிபட்டி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றியது அ.தி.மு.க.,

Added : ஜன 12, 2020
Advertisement

ஆண்டிபட்டி, ஆண்டிபட்டி ஒன்றியத்தில் அ.தி.மு.க.,வின் லோகிராஜன் தலைராகவும், வரதராஜன் துணைத்தலைவராகவும் வெற்றி பெற்றனர்.இந்த ஒன்றியத்தில் உள்ள 19 வார்டுகளில் அ.தி.மு.க., 9, தே.மு.தி.க., 2, தி.மு.க., 5, அ.ம.மு.க., 2, காங்., 1 இடங்களில் வெற்றி பெற்றது. தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஆண்டிபட்டி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. அலுவலர்கள் ராமசுப்பிரமணி, ஆண்டாள், ஜெயகாந்தன் நடத்தினர்.தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் லோகிராஜன், தி.மு.க., சார்பில் ராஜாராம் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள் 19 பேரும் ஓட்டுப்போட்டனர். லோகிராஜன் 12 ஓட்டுக்கள் பெற்று ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார்.கவுன்சிலரான இவர் கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.பிற்பகல் 3:30 மணிக்கு ஒன்றிய துணைத்தலைவருக்கான தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் வரதராஜன், தி.மு.க., சார்பில் வைரமுத்து போட்டியிட்டனர். இதில் 12 ஓட்டுக்கள் பெற்று, வரதராஜன் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் பதவியேற்றுக்கொண்டார். இவர் கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இருவருக்கும் வாழ்த்து தெரிவித்த அ.தி.மு.க.,வினர், பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X