பொது செய்தி

தமிழ்நாடு

5 ஒன்றியங்களில் தலைவர் துணைத்தலைவர் தேர்வு மூன்று ஒன்றியங்களில் கோரம் இன்றி ஒத்திவைப்பு

Added : ஜன 12, 2020
Share
Advertisement

தேனி, தேனி மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் தலைவர், துணைத்தலைவர்கள், 128 ஊராட்சிகளில் துணைத்தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இருகட்டங்களாக நடத்தப்பட்டது. இதில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் 10, 8 ஒன்றியங்களில் 98 கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்களில் 120 பேர், 1,181 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 10 ஊராட்சி தலைவர்கள், 288 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.மாவட்ட கவுன்சிலில் அ.தி.மு.க. 7, பா.ஜ. 1, தி.மு.க. 2 பேர் வெற்றி பெற்றனர்,. ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அ.தி.மு.க. 45, தே.மு.தி.க. 3, பா.ஜ., 1, தி.மு.க. 40, காங்.,2, சுயே.,7 என 98 பேர் வெற்றி பெற்றனர்மறைமுக தேர்தல்: வெற்றி பெற்ற அமைப்புகளில் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நேற்று அனைத்து உள்ளாட்சி அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது இதில் தேனி, ஆண்டிபட்டி, கம்பம், உத்தமபாளையம், போடி ஆகிய ஒன்றியங்களில் தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் நடத்த போதிய கோரம் இல்லாததால் பெரியகுளம், சின்னமனுார், க.மயிலாடும்பாறை ஒன்றியங்களில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. 128 ஊராட்சிகளில் துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டனர். க.மயிலாடும் பாறை ஒன்றியத்தில் இரு ஊராட்சிகளில் கோரம் இல்லாததால் துணைத்தலைவர் தேர்தல் நடக்க வில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X