பொது செய்தி

தமிழ்நாடு

தேனி ஒன்றிய தலைவர், து.தலைவர் தேர்தல்

Added : ஜன 12, 2020
Advertisement

தேனி, தேனி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவியை தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது.தேனி ஒன்றியத்தில் உள்ள 12 கவுன்சிலர்களில் தி.மு.க., காங்., கூட்டணியை சேர்ந்த 7 பேரும், அ.தி.மு.க. 4, ஆதரவு சுயேச்சை ஒருவர் என அவர்களில் 5 பேர் வெற்றி பெற்றனர்.தலைவர் தேர்தலில் தேனி தி.மு.க. ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி கட்சி கவுன்சிலர்கள் 7 பேரை ஒரே காரில் அழைத்து வந்தார். அ.தி.மு.க. கவுன்சிலர்களை பிரகாஷ் அழைத்து வந்தார். ஒன்றிய தலைவர் பதவிக்கு 12 வார்டு கவுன்சிலர் தி.மு.க.வை சேர்ந்த சக்கரவர்த்தி, அ.தி.மு.க. சார்பில் 10 வது வார்டு கவுன்சிலர் சாந்தி போட்டியிட்டனர். இதில் தி.மு.க. 7 ஓட்டுகளும், அ.தி.மு.க. 5 ஓட்டு பெற்று , தி.மு.க., தலைவர் பதவியை கைப்பற்றியது.மாலையில் நடந்த துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்., கவுன்சிலர் முருகன், 7 ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றார். சுயேச்சை கவுன்சிலர் கிருஷ்ணசாமி 5 ஓட்டுக்களை பெற்றார். பல ஆண்டுகளுக்கு பின் தி.மு.க. தேனி ஒன்றியத்தை கைப்பற்றியது.வெற்றி பெற்றதை தொடர்ந்து தி.மு.க. காங்., ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி ஊர்வலமாக சென்றனர். மாவட்ட தலைநகரில் உள்ள ஒன்றியத்தை தி.மு.க., கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X