பொது செய்தி

தமிழ்நாடு

போடி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிகள் அ.தி.மு.க., வசமானது

Added : ஜன 12, 2020
Share
Advertisement

போடி, போடி ஊராட்சி ஒன்றிய தலைவராக அ.தி.மு.க., கவுன்சிலர் சுதா, துணைத்தலைவராக வெங்கடேசன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், போடி ஒன்றியத்தில் தி.மு.க., 5, அ.தி.மு.க., 6, சுயே., 2 பேர் என 13 கவுன்சிலர்கள் தேர்வாயினர். இதில் தலைவர், துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஜஸ்டின்ராஜ் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., நாகராஜ், ஏ.பி.டி.ஓ., சாந்தி முன்னிலை வகித்தனர். காலையில் நடந்த தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.,வில் சுதாவை முன்மொழிந்தனர். தி.மு.க., சார்பில் மனு தாக்கல் செய்தவர் பெயரும், முன்மொழிந்தவரின் பெயரும் ஒன்றாக இருந்ததாக கூறி தேர்தல் அதிகாரிகள் அதனை தள்ளுபடி செய்தனர். இதனால் தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் அ.தி.மு.க.,கவுன்சிலர் சுதா தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் தேர்தலுக்கான போட்டியில் தி.மு.க., கவுன்சிலர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் அ.தி.மு.க., கவுன்சிலர் வெங்கடேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X