கம்பம் ஒன்றிய தலைவராக பா.ஜ.,வை சேர்ந்தவர் தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கம்பம் ஒன்றிய தலைவராக பா.ஜ.,வை சேர்ந்தவர் தேர்வு

Added : ஜன 12, 2020

கம்பம், கம்பம் ஒன்றிய தலைவராக முதன்முறையாக பா.ஜ.,வைசேர்ந்த பழனிமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை தலைவராகஅ.தி.மு.க., வைசேர்ந்த தங்கராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில், கம்பம் ஊராட்சி ஒன்றியம்மிக சிறியது. இங்கு நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி,குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம் ஆகிய ஊராட்சிகள் உள்ளன. ஒன்றிய கவுன்சிலர்கள்4 பேர் மட்டுமே உள்ளனர். எந்த கட்சி 3 ஒன்றிய கவுன்சிலர்களை வைத்துள்ளதோ, அதனைச் சேர்ந்தவர்தான் ஒன்றிய தலைவராக முடியும்.சமீபத்திய தேர்தலில் அ.தி.மு.க., 2 இடங்களிலும், கூட்டணி கட்சியான பா.ஜ., ஒரு இடத்திலும், தி.மு,.க.,ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இந்த ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி சுழற்சி அடிப்படையில் பெண் (பொ) விற்குஒதுக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற அ.தி.மு.க., வினரில் பெண் இல்லை. பா.ஜ.,வில்பெண் வெற்றி பெற்றுள்ளார். எனவே இந்த வாய்ப்பு பா.ஜ., விற்கு கிடைத்தது.நேற்று காலை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி செய்திருந்தார்.ஆனால் தலைவராக பழனிமணியை தேர்வு செய்திருப்பதாக 3 கவுன்சிலர்கள் கூறியதை தொடர்ந்து தேர்தல்நடத்தாமலேயே, தலைவராக பழனிமணி அறிவிக்கப்பட்டார். இவர் சுருளிப்பட்டியை சேர்ந்தவர்.துணைத்தலைவராக அ.தி.மு.க., வை சேர்ந்த தங்கராஜ் தேர்வு செய்யப்பட்டார். ஒரே ஒரு தி.மு.க., கவுன்சிலர் ரேணுகாவும்நிகழ்ச்சியில் பங்கேற்று, புதிய தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.தி.மு.க., புறக்கணிப்பு :உத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் 10 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இதில்அ.தி.மு.க., 7 இடங்களிலும், தி.மு.க., 2 இடங்களிலும், அ.ம.மு.க., ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது. மறைமுக தேர்தலின்போது தி.மு.க., அ.ம.மு.க., கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க., வைச் சேர்ந்த7 பேர் மட்டுமே பங்கேற்று ஓட்டளித்தனர். அதில் ஜான்சி என்பவர் தலைவராகவும், குப்பம்மாள் என்பவர் துணைதலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். ஜான்சி, நாகையகவுண்டன்பட்டியைசேர்ந்தவர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X