சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்களை பதம் பார்க்கும் மண்தூசி: பரிதவிப்பில் மக்கள்

Added : ஜன 12, 2020
Share
Advertisement

போடி, போடி நகராட்சியிலிருந்து காமராஜ் பஜார்- தேவாரம் செல்லும் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் அமைக்கவும், பாதாள சாக்கடை திட்டத்திற்காக அடிக்கடி குழிகள் தோண்டி வருகின்றனர். அக் குழிகளை கிரஷர், துாசி மண்ணால் மூடி வருகின்றனர். எனினும் அவை ரோட்டில் படர்ந்துள்ளன.போடி - தேவாரம் மெயின் ரோடு, பஸ்ஸ்டாண்ட் பகுதியில் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வேகமாக செல்லும் போது வெளியேறும் துாசிகள் அவ்வழியாக செல்லும் மக்களின் கண்களில் விழுந்து பதம் பார்க்கின்றன. வாகன ஓட்டிகளும் நிலைதடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். விபத்துக்களை தவிர்க்க மெயின் ரோட்டில் தேங்கியுள்ள மண் துாசிகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X