ஆர்.எஸ்.எஸ்.,கருத்து நீக்கம் ஐகோர்ட்டில் கல்வித்துறை உத்தரவாதம்

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (32) | |
Advertisement
சென்னை: பாடப் புத்தகத்தில், ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் பற்றிய தவறான கருத்தை நீக்க கோரிய வழக்கில், 'வரும் காலங்களில், இதுபோன்ற வார்த்தைகள் இடம்பெறாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், பள்ளி கல்வித்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், மாநில செயலர், பி.சந்திரசேகரன் தாக்கல் செய்த மனு:சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கு, ஆர்.எஸ்.எஸ்., இயக்கம்
ஆர்.எஸ்.எஸ்., குறித்த கருத்து   கல்வித்துறை உத்தரவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பாடப் புத்தகத்தில், ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் பற்றிய தவறான கருத்தை நீக்க கோரிய வழக்கில், 'வரும் காலங்களில், இதுபோன்ற வார்த்தைகள் இடம்பெறாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், பள்ளி கல்வித்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.


latest tamil news


ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், மாநில செயலர், பி.சந்திரசேகரன் தாக்கல் செய்த மனு:

சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கு, ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் பாடுபடுகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான, சமூக அறிவியல் பாடத்தில், 'சுதந்திர போராட்டத்தின் போது, ஹிந்து மகாசபாவும், ஆர்.எஸ்.எஸ்., இயக்கமும், முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை எடுத்தன' என, கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து பொய்யானது; அடிப்படையற்றது.இளைய தலைமுறையினர் மனதில், விஷத்தை கலப்பதாக உள்ளதால், இந்த வார்த்தையை நீக்கும்படி கோரினோம். ஆனால், பள்ளி கல்வித் துறை, பாடநுால் கழகம், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சமூக அறிவியல் பாடத்தில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., குறித்த இந்த பகுதியை நீக்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி ஆதிகேசவலு முன், விசாரணைக்கு வந்தது. பள்ளி கல்வித்துறை சார்பில், சிறப்பு பிளீடர் முனுசாமி ஆஜராகி, ''வரும் காலங்களில், இதுபோன்ற வார்த்தை இடம்பெறாது,'' என்றார். அதை, மனுவாக தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை வரும், ௨௨ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (32)

vivek c mani - Mumbai,இந்தியா
12-ஜன-202022:22:05 IST Report Abuse
vivek c mani தங்களை பற்றி அளவுமீறி வல்லவர்களாக ,பெரும் அறிவாளிகளாக , சிறந்தோராக கதை கட்டி சித்தரித்துக்கொள்வதில் திராவிட கட்சிகள் திறமைசாலிகள். இவர்களின் இன்னொரு திறமை தன்னால் சிறந்த செயல் முடியவில்லை என்றால் , மற்றவர்களை பழித்து தாம் திறமைசாலிகள் ,புத்திமான்கள் என காட்டிக்கொள்ளும் தன்மை. இந்த இரண்டாம்வகையை சேர்ந்த செயல்தான் RSS பற்றி ஆதாரமில்லாத கருத்தை பாடப்புத்தகத்தில் புகுத்தி சிறுவர்களிடம் RSS மேல் வெறுப்பை வளர்க்கும் முயற்ச்சி.
Rate this:
Cancel
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜன-202018:58:10 IST Report Abuse
Indian Dubai All DMK criminal plan. They intentionally used all the libraries, Education for promoting their party for vote bank. That's why they used ANNA name from Toilet to all places. Poor ANNA, finally he was used like ……. for Kattumaram's vote bank & selfishness. Similarly EVR used like a tissue paper by DMK whenever they need. All the DMK, DK, VC & Vaiko are சுயமரியாதையை மற்றும் அடகு VAIYTHA கூட்டம்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-ஜன-202015:28:09 IST Report Abuse
Natarajan Ramanathan RSS பற்றி பேச அருகதை கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X