பொது செய்தி

தமிழ்நாடு

உப்பாறு அணைக்கு தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜன 12, 2020
Advertisement

உடுமலை:உடுமலை, திருமூர்த்தி அணையிலிருந்து, உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் வழித்தடத்திலுள்ள, தடுப்பணைகள் நிரம்பியதோடு, அணைக்கு வினாடிக்கு, 400 கனஅடி நீர் வரத்துள்ளது.பி.ஏ.பி., திட்டத்தின் கசிவு நீர் அணையாக, தாராபுரம் அருகே, உப்பாறு அணை உள்ளது.
572 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணை மூலம், 10 கிராமங்களிலுள்ள, 6,060 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.மேலும், உப்பாறு ஓடையின் இரு புறமும் உள்ள, பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும், சுற்றுப்புற கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.பி.ஏ.பி., பாசன நிலங்கள் விரிவாக்கம், நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டதால், 1994 முதல் கசிவு நீர்வரத்து குறைந்து, வறண்டு காணப்படுகிறது. இதனால், சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு கூட நீர் கிடைக்காமல், விவசாயிகள் கடுமையாக பாதித்க்கப்பட்டு வருகின்றனர்.பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பி, உபரி நீர் வீணாக வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், வறண்டு காணப்படும் உப்பாறு அணைக்கு நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இதனையடுத்து, திருமூர்த்தி அணையிலிருந்து, பிரதானக்கால்வாய் வழியாக, 48வது கி.மீ.,ல் உள்ள, அரசூர் ெஷட்டர் வழியாக, கடந்த, 9ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.அரசூர் ெஷட்டரிலிருந்து, உப்பாறு அணை, 46 கி.மீ., உள்ளது. இந்த நீர் வழித்தடத்தில், சிறியது, பெரியது என, 17 தடுப்பணைகள் உள்ளன.திருமூர்த்தி அணையிலிருந்து தற்போது திறக்கப்பட்டுள்ள நீரால், வழியோரத்திலுள்ள, அனைத்து தடுப்பணைகளும் நிரம்பியுள்ளன. மேலும், ஓடையிலுள்ள, சிறிய அளவிலான குட்டைகள், ஊராட்சி தடுப்பணைகளும் நிரம்பியுள்ளன. இதனால், விவசாயிகள் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'உப்பாறு அணைக்கு, கடந்த, 9ம் தேதி முதல், திருமூர்த்தி அணையிலிருந்து பிரதானக்கால்வாய் வழியாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து நாட்கள், 173 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும். நேற்று காலை, அணைக்கு, வினாடிக்கு, 400 கன அடி நீர் வரத்து உள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X