பொது செய்தி

தமிழ்நாடு

கவுன்சிலர்களை இழுத்து தோல்வியை தவிர்த்த அ.தி.மு.க., தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் ஆதங்கம்

Added : ஜன 12, 2020
Advertisement

சின்னமனுார், ''சின்னமனுார், பெரியகுளம் ஒன்றியத்தில் தலா ஒரு தி.மு.க., கவுன்சிலரை 'இழுத்து' தோல்வியை அ.தி.மு.க., தவிர்த்தது,'' என தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.சின்னமனுார் ஒன்றிய கவுன்சில் தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் பங்கேற்க தி.மு.க., கவுன்சிலர்கள் 5 பேர் மட்டும் வந்தனர். அ.தி.மு.க.,விற்கு தாவிய முதல் வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஜெயந்தி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 4 பேர் வரவில்லை. அ.தி.மு.க., புறக்கணித்ததால் 'கோரம்'(மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கு வராத நிலை) இல்லை என்று தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.உதவி தேர்தல் அலுவலர் சரவணன் கூறியதாவது: 'கோரம்' இல்லாததால், தேர்தல் ஆணையம் மறுதேதி அறிவிக்கும் வரை, தேர்தல் ஒத்தி வைக்கப்படுகிறது,' என்றார்.தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:சின்னமனுார், பெரியகுளம் ஒன்றியங்களில் தலா ஒரு தி.மு.க., கவுன்சிலரை, அ.தி.மு.க., நிர்வாகிகள் இழுத்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.,வின் தோல்வி தவிர்க்கப்பட்டுள்ளது. கடமலை- மயிலை ஒன்றியத்தில் இரு கட்சிகளும் சமநிலையில் உள்ளன. இந்த மூன்று ஒன்றிய கவுன்சில் தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்ததால், மறு தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்தில் மேலும் சில கவுன்சிலர்களை இழுக்க அ.தி.மு.க., போட்டுள்ள திட்டம் நடக்காது,' என்றார்..

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X