தமிழ்நாடு

மகளிர் ஆதிக்கம்: ஒன்றியங்களில் தலைவர்களாக பெண்கள் தேர்வு

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020
Advertisement
மகளிர் ஆதிக்கம்:  ஒன்றியங்களில் தலைவர்களாக பெண்கள் தேர்வு

உடுமலை:-உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியக்குழு தலைவர்களுக்கான மறைமுக தேர்தலில் பெண்கள் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியத்தில், ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது.
உடுமலை ஒன்றியத்திலுள்ள, 26 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில், 17 வார்டுகளில், தி.மு.க., கூட்டணியும், 8 வார்டுகளில் அ.தி.மு.க., கூட்டணியும், ஒரு சுயேச்சையும் வெற்றி பெற்றனர்.இந்த ஒன்றியத்தின், ஒன்றியக்குழு தலைவர் பதவி, எஸ்.சி.,பொது என ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதிக இடங் களை பெற்ற, தி.மு.க., வில், இரண்டு பெண்கள் மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர்.இந்நிலையில், ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தல் நேற்று நடந்தது. பி.டி.ஓ.,க்கள் சுப்ரமணியம், ஜீவானந்தம் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் அம்பிகா முன்னிலையில் தேர்தல் நடந்தது.இதில், தி.மு.க.,சார்பில், 5வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் மகாலட்சுமி மற்றும், அ.தி.மு.க., சார்பில், 8வது வார்டு கவுன்சிலர் மோகன்ராஜ் ஆகியோர் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இரண்டு வேட்பாளர்களுக்கான ஓட்டுச்சீட்டுகள் தயார் செய்யப்பட்டு, மறைமுகத்தேர்தல் நடத்தது. இதில், தி.மு.க.,வேட்பாளர் மகாலட்சுமி, 19 ஓட்டுகள் பெற்று, ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மோகன்ராஜ் ஏழு ஓட்டுகள் பெற்றார்.மாலையில், ஒன்றியக்குழு துணைத் தலைவருக்கான தேர்தலில், 11 வது வார்டு ஒன்றிய வார்டு கவுன்சிலர் சண்முகவடிவேல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
குடிமங்கலத்தில், 13 ஒன்றிய ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஒன்றியக்குழு தலைவருக்கு, பொது பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில், அதிக இடங்களில், அ.தி.மு.க., வெற்றி பெற்றிருந்தது.ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தல், பி.டி.ஓ.,ரொனால்ட் செல்டன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது.
தேர்தலில், அ.தி.மு.க.,வைச்சேர்ந்த, 9வது ஒன்றிய வார்டு கவுன்சிலர் சுகந்தி, ஒன்றியக்குழு தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதே போல், அ.தி.மு.க.,வை சேர்ந்த, 10வது வார்டு ஒன்றியக்கவுன்சிலர், புஷ்பராஜ் துணைத்தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.மடத்துக்குளம் ஒன்றியக்குழு தலைவர் பதவி, எஸ்.சி.,பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இங்கு, மொத்தமுள்ள, 9 ஒன்றிய கவுன்சிலர்களில், ஏழு இடங்களை தி.மு.க., கூட்டணியும், 2ல், அ.தி.மு.க., கூட்டணியும் வெற்றி பெற்றிருந்தது.நேற்று நடந்த மறைமுகத்தேர்தலில், தி.மு.க.,வைச் சேர்ந்த, 9 வது வார்டை சேர்ந்த, காவியா ஒன்றியக்குழு தலைவராகவும், 5வது வார்டைச்சேர்ந்த, ஈஸ்வரசாமி துணைத்தலைவராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X