பொது செய்தி

தமிழ்நாடு

6 ஒன்றிய குழுக்கள் தலைமையை பிடித்தது தி.மு.க.,

Added : ஜன 12, 2020
Share
Advertisement
 6 ஒன்றிய குழுக்கள் தலைமையை பிடித்தது தி.மு.க.,

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும், 10 ஒன்றியங்களில், ஆறு இடங்களை, தி.மு.க., கைப்பற்றியது; நான்கு ஒன்றியங்களை, அ.தி.மு.க., பிடித்தது; நான்கு ஒன்றியங்களில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு, 2ம் தேதி அறிவிக்கப்பட்டது. மாவட்ட, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அன்றே பொறுப்பேற்றனர்.இந்நிலையில், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் 14 ஒன்றிய குழு தலைவர் துணை தலைவர் தேர்தல், நேற்று நடந்தது.இதில், மாவட்ட ஊராட்சி தலைவராக, தி.மு.க., கவுன்சிலர் உமா மகேஸ்வரி; துணை தலைவர் தேசிங்கு, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவராக, தி.மு.க., ஜெயசீலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவருக்கு, தி.மு.க., கவுன்சிலர்கள், எத்திராஜ், பர்கத் போட்டியிட்டனர். அதில், பர்கத் வெற்றி பெற்றார்.தி.மு.க., ஆதரவுகடம்பத்துாரில், அ.தி.மு.க., வேட்பாளர் சுஜாதா, பா.ம.க., வெங்கடேசன் போட்டியிட்டனர். அ.தி.மு.க., கூட்டணியில் எட்டு இடங்களே இருந்த நிலையில், தி.மு.க., ஆதரவுடன், 15 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அதற்கு பிரதி உபகாரமாக, துணை தலைவராக, அ.தி.மு.க., ஆதரவில், தி.மு.க., வேட்பாளர், சரஸ்வதி வெற்றி பெற்றார்.
தேர்தல் ஒத்தி வைப்பு
பூண்டியில், அ.தி.மு.க., - தி.மு.க.,விற்கு தலா, ஒன்பது பேர் என, சமமாக இருந்த நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர், வெங்கட்ரமணா, 11 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளர் பிரசாந்தி, வெறும், ஏழு ஓட்டுகளை பெற்றார்.மாலையில், துணை தலைவர் தேர்தல் நடந்தது. அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டும் வந்த நிலையில், காலையில் நடந்த களேபரத்தால், தி.மு.க., கவுன்சிலர் யாரும் வரவில்லை. இதையடுத்து, துணைத் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
மொத்தத்தில், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை, தி.மு.க., கைப்பற்றியது.தேர்தல் நடந்த, 10 ஒன்றியங்களில், ஆறு இடங்களை தி.மு.க.,வும், நான்கு இடங்களை அ.தி.மு.க.,வும் கைப்பற்றியது.ஒன்றிய துணை தலைவர் பதவிகளில், ஏழு இடத்தில் தி.மு.க.; அ.தி.மு.க., - பா.ம.க., தலா, ஓரிடத்தை கைப்பற்றியது.
குலுக்கல் முறையில் தேர்வு
கும்மிடிப்பூண்டியில், தி.மு.க., சார்பில், இந்திரா தனலட்சுமியும், அ.தி.மு.க., சார்பில் சிவகுமாரும் போட்டியிட்டனர். 26 ஓட்டுகளில், இருவரும், தலா, 13 ஓட்டுகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதையடுத்து, குலுக்கல் முறையில் நடந்த தேர்தலில், அ.தி.மு.க., சிவகுமார் வெற்றி பெற்றார்.துணை தலைவராக, தி.மு.க., மாலதி வெற்றி பெற்றார். இரு கட்சிகளும், இரு பதவிகளை பகிர்ந்து கொண்டதால், கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலகம் முன் அ.தி.மு.க.,வினரும், தி.மு.க.,வும் ஒருவர் பின், ஒருவராக உற்சாகமாக கொண்டாடினர்.
4 ஒன்றியங்களில் தேர்தல் ஒத்தி வைப்பு
திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில், தலைவர் பதவியை பிடிக்க, தி.மு.க., - அ.தி.மு.க., பிரயத்தனம் செய்து வரும் நிலையில், நேற்று நடந்த தேர்லில், ஒருவர் கூட ஓட்டு அளிக்க வரவில்லை. இதையடுத்து, இரண்டு ஒன்றியங்களிலும், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.திருவாலங்காடு ஒன்றியத்தில், நேற்று வந்த எட்டு அ.தி.மு.க., கவுன்சிலர்களில், ஐந்து பேர் மட்டும் ஓட்டு போடுவதற்கு சம்மதம் தெரிவித்தனர். போதிய, 'கோரம்' இல்லாததால், இங்கும், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., தலா, எட்டு கவுன்சிலர்களுடன் சம பலத்துடன் உள்ளது. நேற்று, தி.மு.க.,வின் எட்டு கவுன்சிலர்கள் மட்டும் வந்ததால், இங்கும், தேர்தல் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.சாலை மறியல்திருத்தணி ஒன்றியத்தில், ஊராட்சி துணைத் தலைவர் தேர்வு நடந்தது. தாடூர் மற்றும் டி.சி.கண்டிகை ஆகிய ஊராட்சிகளில், ஓட்டு போடுவதற்கு வார்டு உறுப்பினர்கள் யாரும் வராததால், தேர்தல் மறுதேதியின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
சூர்ய நகரம் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த துணை தலைவர் தேர்தலின் போது ஒரு தரப்பினர், ஒரு வார்டு உறுப்பினரை கடத்தி சென்று மறைத்து வைத்திருந்ததால், மற்றொரு தரப்பினர் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவாளர்கள், 100க்கும் மேற்பட்டோர், திருத்தணி - - பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
அதை போல், தாடூர் ஊராட்சியில், வார்டு உறுப்பினர் சீனிவாசன் ஆதரவாளர்கள், எங்களை தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை என, திருத்தணி- - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
குலுக்கல் முறையில் தேர்வு
கும்மிடிப்பூண்டியில், தி.மு.க., சார்பில், இந்திரா தனலட்சுமியும், அ.தி.மு.க., சார்பில் சிவகுமாரும் போட்டியிட்டனர். 26 ஓட்டுகளில், இருவரும், தலா, 13 ஓட்டுகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதையடுத்து, குலுக்கல் முறையில் நடந்த தேர்தலில், அ.தி.மு.க., சிவகுமார் வெற்றி பெற்றார்.துணை தலைவராக, தி.மு.க., மாலதி வெற்றி பெற்றார். இரு கட்சிகளும், இரு பதவிகளை பகிர்ந்து கொண்டதால், கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலகம் முன் அ.தி.மு.க.,வினரும், தி.மு.க.,வும் ஒருவர் பின், ஒருவராக உற்சாகமாக கொண்டாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X