ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் 53 பேர் போட்டியின்றி தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் 53 பேர் போட்டியின்றி தேர்வு

Added : ஜன 12, 2020

உடுமலை:உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 72 ஊராட்சிகளின் துணைத்தலைவர்களில், 53 ஊராட்சிகளில், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களிலுள்ள, ஊராட்சிகளில், துணைத்தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், போட்டியிடுபவர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெற்றனர்.உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகளில் நடந்த துணைத்தலைவர்களுக்கான தேர்தலில், 28 ஊராட்சிகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்; 10 ஊராட்சிகளில், தேர்தல் நடந்தது.குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகளில் நடந்த துணைத்தலைவர் தேர்தலில், 16 ஊராட்சிகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்; ஏழு ஊராட்சிகளில் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.மடத்துக்குளம் ஒன்றியத்தில், 11 ஊராட்சிகளுக்கு நடந்த துணைத்தலைவர் தேர்தலில், 9 ஊராட்சிகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இரு ஊராட்சிகளில், தேர்தல் நடத்தப்பட்டது.மூன்று ஒன்றியங்களிலும் உள்ள, 72 ஊராட்சிகளில், 53 ஊராட்சிகளில், துணைத்தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 19 ஊராட்சிகளில் போட்டியிருந்தது. உடனடியாக வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, தேர்தல் நடந்தப்பட்டு, வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X