பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி பழைய ஆயக்கட்டில் நெல் அறுவடை துவக்கம்: அரசு நெல் கொள்முதல் மையங்கள் திறக்க கோரிக்கை

Added : ஜன 12, 2020
Advertisement

உடுமலை:அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதிகளில், நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில், அரசு நெல் கொள்முதல் மையங்களை திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, அமராவதி பழைய ஆயக்கட்டு, 8 ராஜவாய்க்கால் பாசனத்திலுள்ள, 7,520 ஏக்கர் நிலங்களில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 25,250 ஏக்கர், புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களிலும், அதிகளவு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.கடந்த செப்.,மாதம், அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், முதலில் விதைக்கப்பட்ட, அமராவதி அணை, கல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், தற்போது நெல் அறுவடை துவங்கியுள்ளது.10 நாட்களில், அறுவடை பணிகள் தீவிரமடைந்து, அடுத்தடுத்து, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகா பகுதிகளிலும் நெல் அறுவடை பணிகள் துவங்கும்.அறுவடை துவங்கி, வரத்து அதிகரிக்கும் போது, விலை குறைந்து, விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், ஆண்டு தோறும், நெல்லுக்கு ஆதார விலை நிர்ணயித்து, தற்காலிகமாக அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகள் அறுவடை செய்த நெல் நேரடியாக, கொள்முதல் செய்யப்படும்.ஆனால், இந்தாண்டு அறுவடை துவங்கியும், அரசு கொள்முதல் மையம் திறப்பு குறித்து அறிவிப்பு வரவில்லை.கல்லாபுரம் விவசாயி தண்டபாணி கூறியதாவது : அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்ட நெல், தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளது. கல்லாபுரம் பகுதிகளில், தற்போது அறுவடை துவங்கியுள்ளது. வரும் வாரத்தில், அறுவடை தீவிரமடையும்.வழக்கமாக, ஏக்கருக்கு, 60 கிலோ மூட்டை, 40 முதல் 50 மூட்டை வரை வரத்து இருக்கும். காலம் தவறிய சாகுபடி, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால், 30 முதல் 40 மூட்டை மட்டுமே, மகசூல் கிடைத்து வருகிறது. 120 கிலோ, குண்டு ரகம், 2 ஆயிரம் ரூபாய் வரையும், சன்ன ரகம், 1,900 ரூபாய் வரை மட்டுமே விற்கிறது. இடைத்தரகர்கள், தரம் குறைவு உள்ளிட்ட காரணங்களினால், மேலும் விலை குறைந்து, விவசாயிகளுக்கு, கிலோவுக்கு, 14 முதல் 16 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைத்து வருகிறது.அரசு ஆதார விலை, மாநில அரசு ஊக்கத்தொகை நிர்ணயித்தால், கிலோவுக்கு, 18 முதல், 19 ரூபாய் வரை விவசாயிகளுக்கு கிடைக்கும். எனவே, அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, விவசாயி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X